கத்திப்பாரா விபத்து.. நிவாரண தொகையை அறிவித்த முதல்வர் ஸ்டாலின் !

சென்னை கத்திப்பாரா அருகே வழிகாட்டி பலகை பெயர்ந்து சாலையில் சென்ரு கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Chennai Alandur Bus Hits Name Board Falling Accident CM MK Stalin Condolences

மேலும் , சாலையில் சென்ற 2 பேர் படுகாயமடைந்தனர் இந்த சம்பவத்தில் அவ்வழியே சென்ற அரசு பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் விபத்து குறித்து போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. அதில் மாநகர பேருந்து மோதிய வேகத்தில் பெயர் பலகை கம்பம் சாய்ந்ததாகவும் கூறியுள்ளது.

Chennai Alandur Bus Hits Name Board Falling Accident CM MK Stalin Condolences

மேலும் செய்திகளுக்கு..கொடூரம் ! காதலித்த மகளுக்கு விஷ ஊசி போட்ட தந்தை.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இந்த நிலையில் விபத்தில் காயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். சென்னை ஆலந்தூரில் பெயர் பலகை விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுநர் ரகுநாத் கைது செய்யப்பட்டார். அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, G.S.T. சாலையில் ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகச் செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அப்பலகை சாலையில் சாய்ந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முக சுந்தரம் (வயது 28) என்பவர் பலத்த காயமுற்று, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Chennai Alandur Bus Hits Name Board Falling Accident CM MK Stalin Condolences

இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதோடு, போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து 1 இலட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாயும், ஆகமொத்தம் மூன்று இலட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்நிதியினை நேரில் சென்று வழங்கினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு மரணம்.. பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios