கள்ளக்குறிச்சி அருகே 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. தியாகதுருகம் அருகே உள்ள கோவிந்தசாமிபுரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். அந்த மாணவியின் வீட்டிற்கு அருகே அலமேலு என்பவர் வசித்து வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவரது வீட்டிற்கு விஜய் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது விஜய்க்கும், அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் விஜய்யின் அத்தை அலமேலுவுக்கு தெரிய வந்த நிலையில், தனது கணவர் மற்றும் மகனுடன் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மூவரும் மாணவியின் குடும்பத்துடன் தகராறு செய்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இதனால் மனமுடைந்த மாணவி, விபரீத முடிவை எடுத்துள்ளார். யாருமில்லாத போது வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து காதலரின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். மாணவி ஸ்ரீமதியின் மரணம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், மீண்டும் கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கொடூரம் ! காதலித்த மகளுக்கு விஷ ஊசி போட்ட தந்தை.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்