கவனத்திற்கு.. முக்கிய செய்தி !! பொறியியல் கலந்தாய்வு எப்போது.? உயர்கல்வித்துறை புதிய தகவல்

நீட் தேர்வு வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Engineering counselling after the release of NEET results

தமிழகத்தில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. இந்த விண்ணப்பதிவு ஜூலை 19 ஆம் தேதி முடிவடைந்தது. சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூலை 22 ஆம் தேதி வெளியானதால் , மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

அதன்படி தேர்வு முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 5 நாட்கள் சிபிஎஸ்சி மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் படி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 27 வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதாவது இதுவரை பொறியியல் படிப்புகளுக்கு 2.11 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 1,67,387 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். அதேபோல 1,56,214 மாணவர்கள் மட்டுமே அசல் சான்றிதழ்களை  விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் படிக்க:அலர்ட் மாணவர்களே !! பொறியியல் படிப்பு புதிய பாடத்திட்டம் .. 20 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றிய அண்ணா பல்கலை.,

விளையாட்டு பிரிவில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், பொறியியல் கலந்தாய்வுத் தேதிகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று தகவல் வெளியானது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தகவல் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையே சிறப்புப் பிரிவினரான மாற்றுத்திறனாளி, முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய 3 பிரிவினருக்கும் வரும் 16 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குவதாக இருந்தது.  தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க:மாணவர்கள் கவனத்திற்கு !! அரசு கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios