Asianet News TamilAsianet News Tamil

மாணவர்கள் கவனத்திற்கு !! அரசு கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை ?

தமிழகத்திலுள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடங்கியது. காலியாக உள்ள 1.20 லட்சம் இடங்களுக்கு  கலந்தாய்வு தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் அந்தந்த கல்லூரிகள் தங்களுடைய இணையதளத்தில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 

Tamil Nadu's Arts & Science Colleges Counseling from today
Author
Tamil Nadu, First Published Aug 5, 2022, 11:53 AM IST

தமிழகத்திலுள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடங்கியது. காலியாக உள்ள 1.20 லட்சம் இடங்களுக்கு  கலந்தாய்வு தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் அந்தந்த கல்லூரிகள் தங்களுடைய இணையதளத்தில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது

மேலும் படிக்க:சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்.. நாளை இந்த பகுதிகளில் 5 மணிநேரம் கரண்ட் இருக்காது..!

மாநில பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பி.ஏ., பி.காம்‌. பி.எஸ்சி., பி.பி.ஏ.. பி.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில்‌ இருக்கும்‌ 1 லட்சத்து 20 ஆயிரம்‌ இடங்களுக்கு, கிட்டதட்ட 4 லட்சத்து 7 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட மாணவ-மாணவிகள்‌ விண்ணப்பித்திருந்தனர்‌. முதல்முறையாக அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 4 லட்சத்தை கடந்துள்ளது.

மேலும் படிக்க:முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 2,207லிருந்து 3,237 ஆக அதிகரிப்பு… அறிவித்தது டி.ஆர்.பி!!

ஆனால் இவர்களில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர். இவர்கள் மட்டுமே  தகுதியானவர்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு, 1.20 லட்சம் இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது. இந்த மாணவர் சேர்க்கை 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெற உள்ளது.  அவர்களுக்கான இறுதி தரவரிசை பட்டியல்‌ அந்தந்த கல்லூரிகளின்‌ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500... தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

இந்த மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. மேலும் கலந்தாய்வுக்கு வரும்‌ மாணவ-மாணவிகள்‌, அவர்களுடன்‌ வருபவர்கள்‌ கட்டாயம் முககவசம்‌ அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும்‌ அறிவுறுத்திப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios