அலர்ட் மாணவர்களே !! பொறியியல் படிப்பு புதிய பாடத்திட்டம் .. 20 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றிய அண்ணா பல்கலை.,
மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடதிட்டம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைகழகம் தகவல் தெரிவித்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடதிட்டம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைகழகம் தகவல் தெரிவித்துள்ளது.அதே போல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள அண்ணா பல்கலைக்கழக கல்விக் குழு கூட்டத்தில் , மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்திற்கான ஒப்புதல் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பொறியியல் படிப்பிற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டம் இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தவுள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க:மகிழ்ச்சி செய்தி !! ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையே சிறப்பு இரயில்.. எப்போது இருந்து..? ரயில்வே அறிவிப்பு
20 ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் பாடதிட்டம் இந்த முறை மாற்றப்படவுள்ளது. தனிதிறனை மேம்படுத்துதல் மற்றும் வெளிகொணருதல், ஆராய்ச்சி ஊக்குவித்தல், தொழில் முனைவோர் உருவாக்குதல், நவீன தொழில்நூட்பம் போன்றவற்றின் அடிப்படையில் பாடத்திட்டம் அமையவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க:மாணவர்கள் கவனத்திற்கு !! அரசு கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை ?