வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு: செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.

44வது செஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நாளை 9ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், சென்னையில்  பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Attention motorists: Chess Olympiad closing ceremony.. Traffic change in Chennai.

44வது செஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நாளை 9ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், சென்னையில்  பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி தொடங்கியது. பிரதமர் மோடி போட்டியை தொடங்கி வைத்தார், 157 நாடுகளில் இருந்து 2500 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்று போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் இறுதி விழா நாளை நடைபெற உள்ளது, போட்டிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

Attention motorists: Chess Olympiad closing ceremony.. Traffic change in Chennai.

சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில்  நிறைவு விழா நடைபெற உள்ளது, தமிழக முதலமைச்சர் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் நேரு விளையாட்டு அரங்கு சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை மாலை நிறைவு விழா நடைபெற உள்ளதால் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையில் நேரு விளையாட்டு அரங்கை  ஒட்டி உள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் அதாவது ஈவேரா சாலை, ராஜா முத்தையா சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல்  ஏற்படும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே அரங்கம் அமைந்துள்ள ராஜா முத்தையா சாலையை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது, மாலை 3 மணிக்கு சூளையில் இருந்து வரும் வாகனங்கள் முத்தையா சாலை வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே  சூளையின் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள்  ஈ.வி.கே சம்பத் சாலை  மற்றும் ஈவேரா சாலை வழியாக செல்லும்,

Attention motorists: Chess Olympiad closing ceremony.. Traffic change in Chennai.

அதேபோன்று ஜெர்மியா சாலையில் இருந்து வரும்  வாகனங்கள்  ராஜா முத்தையா சாலை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லோடு ஏற்றி வரும் வணிக நோக்கத்திலான வாகனங்கள் ஈவேரா சாலை, கொங்கு ரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு காந்தி-இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

அதேபோல் பிராட்வேயில் இருந்து வருகின்ற வாகனங்கள் குறலகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கி திருப்பி விடப்படும். பின்னர் அந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாக சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம் கண்டு செல்லலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Attention motorists: Chess Olympiad closing ceremony.. Traffic change in Chennai.

எனவே வாகன ஓட்டிகள் நாளை பிற்பகலுக்குப் பின்னர் இந்த சாலைகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்றும் மாற்றாக பிற வழித்தடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதேபோல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் பயணிகள் முன்கூட்டியே அவர்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios