தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- Home
- Tamil Nadu News
- Tamil News live : அதிமுக பொதுக்குழு வழக்கு... வேறு நீதிபதிக்கு மாற்ற ஓபிஎஸ் கோரிக்கை
Tamil News live : அதிமுக பொதுக்குழு வழக்கு... வேறு நீதிபதிக்கு மாற்ற ஓபிஎஸ் கோரிக்கை

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது. வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனு அளித்துள்ளது.
ரெட் அலர்ட்!! இன்று 3 மாவட்டங்களில் அதி கனமழை.. 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்
உன் லவ் உண்மைனா.. இதை நீ செய்யணும்.. மாணவிக்கு காதலன் வைத்த கொடூரமான டெஸ்ட்..!
காதலை நிரூபிக்க மார்பில் பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய மிரட்டி காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிர் பலி வாங்கும் ஆன்லைன் ரம்மி.. "Bye Bye Miss U ரம்மி" என கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை
ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வுகளே அலர்ட்!! குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ வெளியீடு.. ஆட்சபனைகளை தெரிவிப்பது எப்படி..? முழு விவரம்..
சமீபத்தில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் உத்தேச விடைக் குறிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இதில் ஆட்சேபனை இருந்தால், வரும் 8ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
நாசர் எனும் பூனை தினமும் 5.4 லட்சம் லிட்டர் பாலை குடித்து நாளொன்றுக்கு 2.4கோடி ரூபாய் ஊழல்- ஜெயகுமார் விமர்சனம்
நாசர் எனும் பூனை தினமும் 5.4 லட்சம் லிட்டர் பாலை குடித்து ஏப்பம் விட்டு, நாளொன்றுக்கு 2.4கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்
கழிவறைக்கு போனாலும் மோடி அரசு கையேந்தும்.. வெட்கமில்லையா அண்ணாமலை.. டார் டாரா கிழிக்கும் ஆம்
ஆணவம் பிடித்த நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி அமைச்சராக தொடர்ந்தால் இலங்கையைவிட இந்தியா மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியில் தமிழக தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார். கழிவறைக்கு பேனாலும் அங்கு மோடி அரசு கையேந்தும் என்றும் அவர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:மேலும் படிக்க
சூப்பர் நியூஸ் !! இனி அரசுப் பேருந்துகளில் பார்சல் அனுப்பலாம்.. எந்தெந்த ஊரில் இருந்து எவ்வளவு கட்டணம்..?
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் கட்டமாக திருச்சி, மதுரை, சென்னை, திருநெல்வேலி, செங்கோட்டை, கோவை, ஓசூர் ஆகிய மார்க்கத்தில் தங்களது பொருட்களை அரசு விரைவுப் பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க
காவிரி கரையோரங்களில் சிறப்பாக நடைபெற்ற ஆடிபெருக்கு விழா.. ஏராளமான மக்கள் குவிந்து புனித நீராடல்
தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து காவிரி ஆற்றில் நீராட வந்த பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.மேலும் படிக்க
ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டம் - அமைச்சர் நாசர்
ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டமிடப்படுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் வாட்டர் பிளாண்ட் உள்ளதால், விரைவில் குடிநீர் பாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பெரிய ஹீரோக்கள்லாம் ஜம்முனு வர்றாங்க.... கேரவன்ல குஜால் பண்றாங்க - தயாரிப்பாளர் கே.ராஜன் பரபரப்பு பேச்சு
நாட் ரீச்சபிள் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், பெரிய நடிகர்கள் கேரவனில் குஜால் பண்ணுவதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.மேலும் படிக்க
5 ஜி அலைக்கற்றையில் மிகப்பெரிய ஊழல்..!பாஜக அரசு விசாரணை நடத்தவில்லையென்றால்..! அடுத்த அரசு விசாரிக்கும்-ஆ.ராசா
51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்துள்ளது. இது யாருக்காக செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி நடந்துள்ளது ? என இந்த அரசு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் இப்போதைய அரசு தூக்கி எறியப்பட்டு புதிய அரசு அமைந்தவுடன் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கேட்டுக்கொண்டுள்ளார்.
உங்க கூட்டணி கட்சிகளே ஒத்துக்கும் போது.. கள்ள ஓட்டுகளை தடுப்பதால் திமுகவிற்கு என்ன இழப்பு? அண்ணாமலை
ஆதார் மூலம் போலி வாக்காளர்களை அடையாளம் காண்பதில் திமுகவுக்கு என்ன சிக்கல்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1,000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. ஊதிய ஒப்பந்தத்தை ஆக.3 ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் இன்று பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு.. சிபிஐ விசாரணை ரத்து.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் அதிதி ஷங்கர்
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் அதிதி. இப்படத்தில் அவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இப்படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க
தென் மேற்கு பருவ மழை தீவிரம்:வைகை, சோத்துப்பாறை அணை திறப்பு..! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையின் முழு கொள்ளளவான 71 அடியில் நீர்மட்டம் 70 அடியை எட்டிய நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதே போல சோத்துப்பாறை அணையும் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காதலிக்க மறுப்பு.. சினிமா பாணியில் நள்ளிரவில் கதற கதற கடத்தப்பட்ட இளம்பெண்.. பகீர் வீடியோ..!
மயிலாடுதுறையில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீடு புகுந்து கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, விக்கிரவாண்டி டோல்கேட் அருகே இளம்பெண் மீட்கப்பட்டார்.
இப்போல்லாம் பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க படம் நடிக்க வர்றாங்க... நடிகர் ராதாரவி பரபரப்பு பேச்சு
இரவின் நிழல் சக்சஸ் மீட்டில் பேசிய ராதாராவி, “பார்த்திபன் மூஞ்சிய 2 மணிநேரம் தொடர்ந்து பார்க்க முடியுமா, ஆனா ஒத்த செருப்பு படத்துல பார்க்க வச்சான்ல, அதுதான் திறமை. இப்போலாம் பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க நடிக்க வர்றாங்க. நான் சாபம் விட்டாலே அப்படி ஆகிடுவாங்க போல. விளம்பரத்துல ஆடுறத பார்த்தப்பவே இவன் நடிக்க வந்துருவான்னு சொன்னேன் ஒரு மேடைல. அதே மாதிரியே வந்துட்டான்யா” என கூறினார்.மேலும் படிக்க
விடாது ஊற்றும் கனமழை.. நிரம்பி வழியும் அணைகள்.. தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க