Asianet News TamilAsianet News Tamil

சீமானுக்கு வாய்க்கொழுப்பு அதிகம்.!அதிமுகவிடம் காட்டினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடம்-ஜெயக்குமார்

 நாசர் எனும் பூனை தினமும் 5.4 லட்சம் லிட்டர் பாலை குடித்து ஏப்பம் விட்டு, நாளொன்றுக்கு 2.4கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 

Former minister Jayakumar has alleged that the DMK government is involved in scientific malpractice in Aavin milk
Author
Chennai, First Published Aug 3, 2022, 1:43 PM IST

தீரன் சின்னமலையின் 217வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை படத்திற்கு அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பாலின் அளவை குறைத்து திமுக வினர் ஆதாயம் தேடுகின்றனர். தினமும் 33லட்சம் லிட்டர் அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் 5.5 லட்சம் லிட்டர் பாலை தினமும் நாசர் என்ற பூனை குடித்துவிட்டது, இதன் மூலம் 2.4 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு, ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் பாலில் இருந்து ஆதாயம் தேடி வருகிறார். இது குறித்து விசாரணை நடைபெறும் என அமைச்சர் நாசர் தெரிவிக்கிறார். துறை ரீதியான விசாரணையில் நியாயம் கிடைக்காது என கூறியவர்,விஞ்ஞான ஊழலில் ஈடுபடும் திமுகவின் பாரம்பரியத்தில் வந்த அமைச்சர்  நாசரும் தொடர்கிறார் என ஜெயகுமார் குற்றம்சாட்டினார்.

தொழிலாளர்களை வஞ்சிக்கும் திமுக...கொடுத்த வாக்குறுதியை ஓராண்டாக ஏமாற்றி சாதனை..! ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை

Former minister Jayakumar has alleged that the DMK government is involved in scientific malpractice in Aavin milk
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் கடலில் பேனா சின்னம் வைப்பதன் மூலம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். சென்னையின் அடையாளமாக மீனவ கிராமங்கள் உள்ளது. அதனை மறைக்க பேனா சின்னம் அமைக்கப்படுகிறது. இதனால் மீனவர்களின் அடையாளத்தை மறைக்க கூடாது. இந்த சின்னத்தை அமைக்க திமுகவின் அறக்கட்டளை பணம் உள்ளது, அதில் செலவு செய்யட்டும் என கூறினார். அதிமுக தலைவர்களை இழிவுப்படுத்தும் வகையில் சீமான் பேசுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அதிமுகவின் மறைந்த தலைவர்களை சீமான் விமர்சித்துள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என தெரிவித்தார். சீமான் தனது வாய்க் கொழுப்பு அதிகமாக இருப்பதாகவும், அதிமுக விடம் காட்ட வேண்டாம் திமுகவிடம் காட்டுங்கள்,  இல்லையெனில் கடும் விளைவுகளை  சீமான் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் பிற்காலத்தில் சீமானுக்கு அவரது கட்சி காரர்கள் சிலை வைப்பதாக இருந்தால் ஆமைக்கறியை தான் சிலையாக வைப்பார்களா? என கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாங்கள் பங்கேற்றோம். ஆனால், கோவை செல்வராஜ் கூட்டத்தில் ஏன் பங்கேற்றார் அவர் எந்த கட்சி, சுயேட்சையா என்று தெரியவில்லை என கூறினார்.

5 ஜி அலைக்கற்றையில் மிகப்பெரிய ஊழல்..!பாஜக அரசு விசாரணை நடத்தவில்லையென்றால்..! அடுத்த அரசு விசாரிக்கும்-ஆ.ராசா

Former minister Jayakumar has alleged that the DMK government is involved in scientific malpractice in Aavin milk

அதிமுக மூத்த நிர்வாகி பன்ட்ருட்டி ராமச்சந்திரன் சசிகலாவின் சந்திப்பிற்கு பிறகு, இபிஎஸ் மீது விமர்சனம் வைத்தது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுக தலைமை தான் நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என தெரிவித்தார். திமுக எப்பொழும் சந்தர்ப்பவாத கட்சியாக தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்திரா காந்தியை நேருவின் மகளே வருக, இந்தியாவின் திருமகளே வருக என கருணாநிதி வரவேற்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தனர். அது போல, பாஜகவை எதிர்க்கின்றனர், ஆனால், பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து முதலமைச்சரின் மருமகன் சபரீசன் திருச்செந்தூரில் யாகம் வளர்த்தது சந்தர்ப்பவாத அரசியலை வெளிகாட்டுகிறது என ஜெயக்குமார்  விமர்சித்தார்.

டெண்டர் முறைகேடு வழக்கு: இபிஎஸ்க்கு நிம்மதி கொடுத்த உச்சநீதிமன்றம்.. சிபிஐ விசாரணைக்கான உத்தரவு ரத்து

Follow Us:
Download App:
  • android
  • ios