பெரிய ஹீரோக்கள்லாம் ஜம்முனு வர்றாங்க.... கேரவன்ல குஜால் பண்றாங்க - தயாரிப்பாளர் கே.ராஜன் பரபரப்பு பேச்சு
Producer K Rajan : நாட் ரீச்சபிள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், பெரிய நடிகர்களை தாக்கி பேசி பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட் ரீச்சபிள் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், பெரிய நடிகர்களை தாக்கி பேசி இருந்தார். அவர் பேசியதாவது : “தற்போதைய காலகட்டத்தில் சினிமாவை காப்பாற்றுவது சின்னப்பட தயாரிப்பாளர்கள் தான். பெரிய பெரிய ஹீரோக்கள் அவங்கவுங்க பிழைக்க தான் பார்க்கிறார்கள்.
அவர்கள் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய துரோகம் செய்கிறார்கள் அது என்னவென்றால், அவர்கள் எடுப்பது தமிழ் படம், அதில் நடிப்பது தமிழ் நடிகர்கள், அதைப்பார்க்கப் போகிற ரசிகர்களும் தமிழர்கள், ஆனால் ஷூட்டிங் ஃபுல்லா மும்பையிலும் ஐதராபாத்திலும் நடத்துறாங்க. அவர்கள் இப்படி செய்தால் நம் தமிழ் நாட்டில் உள்ள சினிமா தொழிலாளர்கள் எப்படி பிழைக்க முடியும்.
நடிகர்களுக்கு என்ன நோவு, எல்லா நடிகர்களையும் கேட்குறேன். ஜம்முனு குளு குளு கார்ல வர்றாங்க, கேரவன்ல உட்கார்ந்து சீட் ஆடுறாங்க, அப்புறம் குஜால்லாம் பண்றாங்க. ஷாட்டுக்கு கூப்பிட்டா வர்றது இல்ல. ஒரு படத்தின் ஷூட்டிங் ஒரு மணிநேரம் தாமதமானால் அந்த தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் தெரியுமா?
இதையும் படியுங்கள்... ஷங்கர் மகளுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு... கார்த்தியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் அதிதி
கேரவனில் இருந்து அருகில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதற்கு 7 பவுன்சர்கள் வேற வச்சிக்கிறாங்க. அப்படி என்ன தப்பு பண்ணீட்டிங்க. நீங்கெல்லாம் என்ன பயங்கரவாதியா. இப்போதைய காலகட்டத்தில் படம் எடுப்பது பெரிதல்ல. என்னென்னவோ கஷ்டப்பட்டு ஷூட்டிங்கை முடிச்சிடுறாங்க. ஆனா ரிலீஸ் பண்ணுவது தான் ரொம்ப கஷ்டமாக உள்ளது.
படத்துக்கு கதை தான் முக்கியம் கதாநாயகர்கள் முக்கியமில்லை என்பதை பல படங்கள் உணர்த்தி உள்ளன. இங்கு 50 கோடி வாங்கும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களை விட 5 லட்சம் சம்பளம் வாங்கும் சின்ன நடிகர்கள் நடிக்கும் படங்கள் தான் நன்றாக ஓடுகின்றன. அதேபோல் இந்த நாட் ரீச்சபிள் திரைப்படமும் மக்களிடம் சென்று ரீச் ஆகும்” எனக் கூறினார்.
இதையும் படியுங்கள்... மஞ்சள் நிற லெஹங்காவில்... மிதமான கவர்ச்சி காட்டி மனம் மயக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்.!