Aditi shankar : கார்த்தியின் விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள நடிகை அதிதி ஷங்கர், அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அந்த வகையில் இவர் நடித்த முதல் படம் விருமன். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதிதி. முத்தையா இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிலையில் அதிதி நடிக்க உள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... வின்னர்.. வின்னர்.. சிக்கன் டின்னர்! தனுஷ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு செஸ் வீரர்கள் - வைரல் வீடியோ

அதன்படி மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் அதிதி. இப்படத்தில் அவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இப்படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Scroll to load tweet…

நடிகை அதிதி ஷங்கர் அடுத்தடுத்து கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருவதைப் பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மாவீரன் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் யோகிபாபு, இயக்குனர் மிஷ்கின் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... இப்போல்லாம் பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க படம் நடிக்க வர்றாங்க... நடிகர் ராதாரவி பரபரப்பு பேச்சு