வின்னர்.. வின்னர்.. சிக்கன் டின்னர்! தனுஷ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு செஸ் வீரர்கள் - வைரல் வீடியோ
chess olympiad 2022 : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் வெளிநாட்டு வீரர்கள் சிலர் தனுஷ் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியை கடந்த ஜூலை 28-ந் தேதி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இந்த போட்டியில் தற்போது வரை 5 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரை பிரபலப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக இன்று மக்கள் மத்தியில் செஸ் போட்டிகள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.
இதையும் படியுங்கள்... யுவனுடன் சேர்ந்து செம்ம டூயட் சாங்... விருமன் மூலம் பாடகியாகவும் அறிமுகமான அதிதி ஷங்கர் - வைரலாகும் கிளிம்ப்ஸ்
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ள வெளிநாட்டு வீரர்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் அரங்கத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் கரகாட்டம், பறை இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த வெளிநாட்டு வீரர்கள் அவர்களுடன் நடனமாடியும் மகிழ்ந்தனர். அதுமட்டுமின்றி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற்ற வெளிநாட்டு வீரர்கள் சிலர் தமிழ் சினிமா பாடல்களுக்கு நடனமாடினர். குறிப்பாக தனுஷின் பட்டாசு படத்தில் இடம்பெறும் சில் ப்ரோ பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து ஐடி ரெய்டில் சிக்கும் அன்புச்செழியன் - யார் இவர்?... சினிமாவில் இவரின் பங்களிப்பு என்ன?