தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 

03.08.2022: தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிகக்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும்‌, நீலகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, மதுரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, விருதுநகர்‌, நாமக்கல்‌ ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

04.08.2022: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ அதி கனமழையும்‌, தென்காசி, விருதுநகர்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிகக்‌ கனமழையும்‌,
நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:தேர்வுகளே அலர்ட்!! குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ வெளியீடு.. ஆட்சபனைகளை தெரிவிப்பது எப்படி..? முழு விவரம்..

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணி 11 செ.மீ, சின்னக்கல்லார்‌ 9 செ.மீ, பாலக்கோடு, மாரண்டஹள்ளி தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க:உயிர் பலி வாங்கும் ஆன்லைன் ரம்மி.. "Bye Bye Miss U ரம்மி" என கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்ககாற்று மணிக்கு 50 முதல்‌ 60 கி.மீ வேகத்தில்‌ விசக்கூடும்‌. எனவே மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.