ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. இந்நிலையில், ரூ.5 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சுரேஷ். ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி சுமார் ரூ. 5 லட்சம் வரை இழந்த நிலையில் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், "Bye Bye Miss U" ரம்மி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தியதில் வெளிநாடு செல்ல வைத்திருந்த பணத்தை ரம்மியால் இழந்ததுடன், நண்பர்களிடம் கடன் பெற்று அதனையும் இழந்துள்ளார். இதனால், ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆன்லைன் ரம்மியில் விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து விரக்தியில் இளைஞர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.