09:56 PM (IST) Aug 13

சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை... பாஜகவை கடுமையாக விமர்சித்த பழனிவேல் தியாகராஜன்!!

ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இதை அடுத்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவை விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க...

09:16 PM (IST) Aug 13

“மண்டைய உடைச்சிடுவேன்டா ராஸ்கல்..” செய்தியாளரிடம் வம்புக்கு போன சீமான் !

இந்த பேட்டியின் போது செய்தியாளர் ஒருவர் வரிசையாக கேள்வி கேட்க, இதனால் கோபமடைந்தார் சீமான். அப்போது சீமான் செய்தியாளரை, டே மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்’ என்று திட்டியுள்ளார்.

மேலும் படிக்க

08:34 PM (IST) Aug 13

பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு..போலீஸ் எடுத்த அதிரடி முடிவு

காரில் ஏறி புறப்பட்ட நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் தனது செருப்பை எரிந்துள்ளார். சிலர் காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் படிக்க

08:13 PM (IST) Aug 13

பிடிஆர் கார் மீது வீசப்பட்ட செருப்பு.. போராட்டத்தில் குதித்த திமுக - தமிழக முழுவதும் பரபரப்பு

அஞ்சலி நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து பிடிஆர் சென்ற பொது கூட்டத்தில் இருந்த சிலர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க

05:39 PM (IST) Aug 13

ஜெயலலிதா இருந்திருந்தால்.. செருப்படி விழுவது தலைவரே.. மோதும் திமுக Vs பாஜக

கோபமடைந்த பாஜகவினர் , ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசினர்.

மேலும் படிக்க

05:23 PM (IST) Aug 13

சென்னை தனியார் வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு பணம் கொள்ளை... அதிர்ச்சி தரும் முதற்கட்ட தகவல்!!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் நகை மற்றும் பணம் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வங்கிக்குள் பட்டப்பகலில் நுழைந்த மர்ம நபர்கள், வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு வங்கியில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கியில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிங்க...

03:37 PM (IST) Aug 13

அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர்.. வைரல் வீடியோ

மறைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க

03:35 PM (IST) Aug 13

மதுரை வீரர் லட்சுமணன் வீர மரணம்

தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணனும் ஒருவர்.

மேலும் படிக்க

03:17 PM (IST) Aug 13

ஜாதி, மத பேதமின்றி ஆகஸ்ட் 15-ந் தேதி மறக்காம இதை செய்யுங்க - நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15-ந் தேதி, ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல், நாம எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு, ஒரு 2 அல்லது 3 அடி நீளம் கொண்ட கம்பில் நமது நாட்டின் தேசிய கொடியை கட்டி, நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கையால நம் வீட்டின் முன் அந்த கொடியை பறக்கவிட்டு, நாம் பெருமைகொள்வோம் என ரஜினி கூறி உள்ளார். மேலும் படிக்க

Scroll to load tweet…
02:35 PM (IST) Aug 13

சில நிமிடங்கள் செலவிடுங்க! பிஎப் சந்தாதாரர் வீட்டிலிருந்தே ஆன்லைனில் UAN எண் பெறலாம்: எப்படி?

இபிஎப்ஓ சந்தாதாரர்கள் வீட்டிலிருந்தே படியே தங்களுடைய யுஏஎன்(UAN) எண்ணை ஆன் லைன் மூலம் சில நிமிடங்களில் பெறலாம். இதன் மூலம் பிஎப் கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற முடியும்.விரிவான செய்திகளுக்கு

02:34 PM (IST) Aug 13

ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் மகன் உள்பட 4 பேர் காஷ்மீர் அரசுப் பணியிலிருந்து நீக்கம்

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சயத் சலாலுதீன் மகன் சயத் அப்துல் முயீத், சிறையில் இருக்கும் பிரிவினைவாதத் தலைவர் பிட்டா கராத்தே மனைவி உள்பட 4 பேர் ஜம்மு காஷ்மீர் அரசுப்பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.விரிவான செய்திகளுக்கு

02:34 PM (IST) Aug 13

கே.ஜி.எஃப் டீமிற்காக சுதா கொங்கரா இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் பிரம்மாண்டமாக தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் படிக்க

02:08 PM (IST) Aug 13

தூக்கத்தை கெடுத்த ஒன்றரை வயது மகன்.. துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. மூக்கில் வாயில் ரத்தம் வடிந்து பலி.

தூக்கத்தை கெடுத்த ஒன்றரை வயது மகனை தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் திடீரென அடங்கியாதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்ததில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில நேரங்களில் மனிதர்கள் விலங்குகளை விட கொடூரமாக நடந்து கொள்கின்றனர். மேலும் படிக்க

02:07 PM (IST) Aug 13

சென்னை விமான நிலையத்தில் ராஜநாகம்.. அசால்டா பையில் வைத்து தூக்கி வந்த பயணி.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ராஜநாகம், மலைப்பாம்பு, ஆமை, குரங்கு குட்டி போன்றவை மீண்டும் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.நேற்றிரவு தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட கோடிய விஷ ஜந்துக்கள் கடந்திவரப்பட்ட நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் இந்நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலும் படிக்க


02:06 PM (IST) Aug 13

ரூ. 25க்கு தேசிய கொடியை வாங்கிதான் ஆகணும்.. இல்லனா 1000 ஆபராதம்.. கோவை மாநகராட்சி ஊழியர்கள் அட்ராசிட்டி.

கோவையில் உள்ள கடைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தேசியக்கொடியினை 25 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டுமென நிர்ப்பந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கொடியை வாங்கிக் கொள்ளாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் கடைகாரர்களை மிரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளத்தில் பரவியுள்ளதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் படிக்க

02:05 PM (IST) Aug 13

தொடர்ந்து மாணவிக்கு ஆபாச மெசேஜ்.. தொடக்கூடாத இடங்களில் கை வைத்து அசிங்கம்.. தமிழ் ஐயா சில்மிஷம்

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன் உடல் ரீதியான பாலியல் சீண்டலில் தமிழ் ஆசிரியர் ஈடுபட்டுவந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்த ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் படிக்க


02:03 PM (IST) Aug 13

அமைச்சர் பிடிஆர் கார் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு.. விரட்டி வந்து பாஜகவினர் செய்த சம்பவம்.

தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்த வந்த போது அவரது கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க

01:41 PM (IST) Aug 13

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் காட்டில் மழை: ரூ.2999க்கு ரீசார்ஜ், ரூ.3 ஆயிரத்துக்கு இலவசங்கள்

75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது. ஓர் ஆண்டுக்கு மொத்தமாக ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ.3 ஆயிரத்துக்கான இலவசங்களை அளிக்கிறது.விரிவான செய்திகளுக்கு

12:55 PM (IST) Aug 13

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று

காங்கிரஸ் தலைவர் சோனியாா கந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் 2வது முறையாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

12:54 PM (IST) Aug 13

பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்த ‘விருமன்’... அதுவும் ஒரே நாளில் இத்தனை கோடியா..!

நடிகர் கார்த்தியின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற புதிய சாதனையை விருமன் படைத்துள்ளது. இதற்குமுன் சுல்தான் படம் ரூ.5 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது விருமன் அதனை முறியடித்துள்ளது.மேலும் படிக்க