Tamil News Highlights : கனமழை எதிரொலி - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை !

Tamil News live updates today on august 1 2022

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

10:11 PM IST

கனமழை எச்சரிக்கை - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை !

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

5:59 PM IST

முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் தூக்கிட்டு தற்கொலை

ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:13 PM IST

சென்னை அருகே 2வது விமான நிலையம்

சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 

மேலும் படிக்க

3:06 PM IST

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 8 மாவட்டங்களில் மிக கனமழை.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க

2:50 PM IST

பழனியில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 41 வயது பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து பழனிக்கு திரும்பிய பெண்ணுக்கு உறுதியாகியுள்ளது. 

2:47 PM IST

மக்களவையில் 4 எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து

மக்களவையில் 4 எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது.

2:46 PM IST

பட்டப்பகலில் புதுமாப்பிள்ளை ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

புதுச்சேரியில் பட்டப்பகலில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

2:21 PM IST

பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம்

சென்னை அடுத்த பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தமிழக அரசு இறுதி செய்தது.
 
2:19 PM IST

கடலுக்கு நடுவில் 134 உயரத்தில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம்.. மத்திய அரசுக்கு கடிதம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னையில் மெரினா கடற்கரை அவரது சமாதிக்கு பின்புறம் கடலுக்கு நடுவில் 81 கோடி ரூபாய் மதிப்பு 134 உயரத்திற்கு கலைஞர் பேனா  நினைவுச் சின்னம் அமையவுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை ஆய்வை மேற்கொள்ள, ஆய்வு எல்லைகளை கோரி மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
 
2:04 PM IST

மதுரையில் கலைஞர் நூலக கட்டிடத்தில் விபத்து..!! வடமாநில இளைஞர் உயிரிழந்ததால் பரபரப்பு

மதுரை கலைஞர் நினைவு நூலகம் கடந்த 8 மாதங்களாக கட்டப்பட்டு வரும் நிலையில்,  விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது. தற்போது  5வது தளத்தில் பணியாற்றி வந்த மேற்குவங்க தொழிலாளர் இக்பால் கீழே விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
1:45 PM IST

சாதியை சொல்லி திட்டிய ராஜகண்ணப்பன்.. திமுக அமைச்சரை சுற்றுபோடும் தேசிய தாழ்தப்பட்டோர் நல ஆணையம்.

முதுகுளத்தூரில் பிடிஓவை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்திய அமைச்சர்  ராஜகண்ணப்பனிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையை இந்த விசாரணை நடந்து வருகிறது. இதில் ராஜகண்ணப்பன் நேரில்  ஆஜராகி  விளக்கம் அளித்து வருகிறார். மேலும் படிக்க
 
1:42 PM IST

அனைத்து ரக நூல் விலையும் கிலோவிற்கு ரூ30 குறைவு.. ஜவுளித்துறையில் புதிய ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு..

திருப்பூர்‌ பின்னலாடை உற்பத்திக்குத்‌ தேவையான அனைத்து ரக நூல்களும்‌ கிலோவுக்கு ரூ.30 குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர்கள்‌ அதிகரிக்க வாய்ப்புள்ளது.மேலும் படிக்க
 
1:08 PM IST

ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்.. விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம்

6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உதவிதொகைக்கான விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், திருத்தங்களை செய்தலை விரைந்து மேற்கொள்ள உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் படிக்க

1:04 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - கைது செய்யப்பட்ட 5 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  பள்ளி முதல்வர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மிதான விசாரணை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. கள்ளக்குறிச்சி 12 ஆம் வகுப்பு தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12:57 PM IST

பயணிகள் வேனில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் துடி துடித்து உயிரிழந்தனர்.. நள்ளிரவில் பயங்கரம்.

மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் கடும் காயம் அடைந்துள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

12:48 PM IST

அனைத்து கட்சி கூட்டம்...! அதிமுக பெயர் பலகையை ஓபிஎஸ் ஆதரவாளரிடம் இருந்து தன் பக்கம் நைசாக நகர்த்திய ஜெயக்குமார்..

தேர்தல் ஆணையம் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து அமர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும் படிக்க..

12:19 PM IST

காலியாக 1,089 அரசு பணியிடங்கள்.. நவம்பர் 6 ஆம் தேதி எழுத்துத் தேர்வு.. எப்போது..? எப்படி விண்ணப்பிப்பது..?

நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய 1089 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டது. தகுதியுடையோர் www.tnpsc.gov எனும் இணையளத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வரும் நவ-6ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்றூ டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

11:52 AM IST

சல்மான் கானுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கிய போலீஸ்

மும்பை மாநகரின் புதிய போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் பன்சல்கரை சமீபத்தில் சந்தித்த நடிகர் சல்மான் கான், அவரிடம் தனக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கொடுக்குமாறு விண்ணப்பித்திருந்தார். தற்போது சல்மான் கானின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான லைசன்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.மேலும் படிக்க

11:04 AM IST

அதிர்ச்சி !! திடீரென்று தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்.. நெல் வியாபாரி சம்பவ இடத்திலே உடல் கருகி பலி..

புதுச்சேரியில் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி நெல் வியாபாரி ஒருவர் உடல் கருவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

11:03 AM IST

ஈரோடு மேம்பாலத்திற்கு ஜெயலலிதா பெயர்...! ஒன்றரை வருடமாக மூடி வைத்திருப்பது ஏன்..? ஓ.பி.எஸ் ஆவேசம்..

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் ஈரோட்டில் அமைந்துள்ள மேம்பாலத்தின் பெயர்ப் பலகையை சீர்செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

10:48 AM IST

கடலுக்கு அடியில் பிறந்தநாள் பேனர்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கடலுக்கு அடியில் பேனர் வைத்த இளைஞர்
 
10:47 AM IST

கடலுக்கு அடியில் செஸ்!

கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நம்ம சென்னை பேனருடன் செஸ் விளையாடிய வீரர்கள்!

10:38 AM IST

துப்பாக்கிக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்லணும்.. சமரச பேச்சு இருக்கக்கூடாது.. ஆளுநர் ஆர்.என்.ரவி.!

கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்;- வன்முறையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஒருவர் துப்பாக்கியை தூக்கிவிட்டால் அந்த நபரிடம் துப்பாக்கியால்தான் நாமும் பேச வேண்டும். 

மேலும் படிக்க

10:28 AM IST

கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் விலக்கு

கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து, அதே பள்ளிகளில் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு கருத்துருவை தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 
10:26 AM IST

5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன்..! 4 வது மனைவி புகாரால் போலீசாரிடம் சிக்கிய மாப்பிள்ளை

புதுச்சேரியில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்தவர் மீது 4ஆவது மனைவி போலீசில் புகார் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10:01 AM IST

தொடர்ந்து நிர்வாணமா போட்டோஷூட் நடத்துங்க ரன்வீர்.. உங்கள இப்படி பார்க்கதான் விரும்புறேன்- பிரபல நடிகை கோரிக்கை

பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த், ரன்வீர் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். தான் துபாயில் இருந்து திரும்பியது முதல் எங்கு பார்த்தாலும் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட் பற்றிய பேச்சாகத் தான் இருக்கிறது. இந்த போட்டோஷூட்டில் அவர் மிகவும் ஹேண்ட்சமாக உள்ளார்.மேலும் படிக்க

9:30 AM IST

ஏசி வெடித்ததில் படுக்கையிலேயே உயிரிழந்த இளைஞர்

சென்னை பெரம்பூரில் வீட்டில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

9:29 AM IST

என்.எல்.சி. பொறியாளர் பணியிடத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு.. மக்களவையில் திமுக நோட்டீஸ்

என்.எல்.சி. பொறியாளர் பணியிடத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு பற்றி விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. என்.எல்.சி பொறியாளர் பணியிடங்களில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 

8:32 AM IST

ஆடிப்பூரம்.. தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு பால், மஞ்சள், பன்னீர், தேன் உள்ளிட்டவற்றால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், விநாயகருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 

8:02 AM IST

LPG Price Today:குட்நியூஸ் மக்களே.. சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு..! எவ்வளவு தெரியுமா?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்து ரூ.2,141க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை.

மேலும் படிக்க

7:34 AM IST

முதல் குழந்தை பிறந்து ஒருவருஷம் கூட ஆகல, அதற்குள் 2-வது குழந்தையா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரியங்கா சோப்ரா

முதல் குழந்தை பிறந்து 7 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது பிரியங்கா - சோப்ரா நிக் ஜோனஸ் தம்பதி அடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ள தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் குழந்தையை போன்றே இந்த குழந்தையையும் வாடகைத் தாய் மூலமே பெற்றுக்கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளார்களாம். மேலும் படிக்க

7:34 AM IST

காமன்வெல்த் போட்டி... இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்று அசத்தல்

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது. 

7:32 AM IST

அதிமுக பொதுக்குழு செல்லுமா, செல்லாதா? உச்ச நீதிமன்ற கருத்தால் குஷியில் ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் இபிஎஸ்.!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக கடந்த 6-ம் தேதி தாங்கள் வழங்கிய தீர்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல், உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:31 AM IST

காமன்வெல்த் போட்டி... இந்தியாவுக்கு 3வது தங்கம்

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம் வென்றுள்ளது. ஆடவர் பளு தூக்குதல் 73 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்று அசத்தியுள்ளார். 

7:30 AM IST

தேர் கவிழ்ந்த விபத்து.. 2 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டையில் கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் ஊழியர்கள் ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சக்கரத்தில் கட்டையை போட்டு தேரை நிறுத்த முயன்று விபத்தை ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

7:22 AM IST

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்து ரூ.2,141க்கு விற்பனை  செய்யப்படுகிறது. வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை. 

7:20 AM IST

சென்னையில் 71வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னையில் 71வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

10:11 PM IST:

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

6:30 PM IST:

ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:13 PM IST:

சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 

மேலும் படிக்க

3:06 PM IST:

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க

2:50 PM IST:

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 41 வயது பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து பழனிக்கு திரும்பிய பெண்ணுக்கு உறுதியாகியுள்ளது. 

2:47 PM IST:

மக்களவையில் 4 எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது.

2:46 PM IST:

புதுச்சேரியில் பட்டப்பகலில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

2:21 PM IST:

சென்னை அடுத்த பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தமிழக அரசு இறுதி செய்தது.
 
2:19 PM IST:

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னையில் மெரினா கடற்கரை அவரது சமாதிக்கு பின்புறம் கடலுக்கு நடுவில் 81 கோடி ரூபாய் மதிப்பு 134 உயரத்திற்கு கலைஞர் பேனா  நினைவுச் சின்னம் அமையவுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை ஆய்வை மேற்கொள்ள, ஆய்வு எல்லைகளை கோரி மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
 
2:04 PM IST:

மதுரை கலைஞர் நினைவு நூலகம் கடந்த 8 மாதங்களாக கட்டப்பட்டு வரும் நிலையில்,  விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது. தற்போது  5வது தளத்தில் பணியாற்றி வந்த மேற்குவங்க தொழிலாளர் இக்பால் கீழே விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
1:45 PM IST:

முதுகுளத்தூரில் பிடிஓவை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்திய அமைச்சர்  ராஜகண்ணப்பனிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையை இந்த விசாரணை நடந்து வருகிறது. இதில் ராஜகண்ணப்பன் நேரில்  ஆஜராகி  விளக்கம் அளித்து வருகிறார். மேலும் படிக்க
 
1:42 PM IST:

திருப்பூர்‌ பின்னலாடை உற்பத்திக்குத்‌ தேவையான அனைத்து ரக நூல்களும்‌ கிலோவுக்கு ரூ.30 குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர்கள்‌ அதிகரிக்க வாய்ப்புள்ளது.மேலும் படிக்க
 
3:43 PM IST:

6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உதவிதொகைக்கான விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், திருத்தங்களை செய்தலை விரைந்து மேற்கொள்ள உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் படிக்க

1:04 PM IST:

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  பள்ளி முதல்வர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மிதான விசாரணை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. கள்ளக்குறிச்சி 12 ஆம் வகுப்பு தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12:57 PM IST:

மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் கடும் காயம் அடைந்துள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

12:48 PM IST:

தேர்தல் ஆணையம் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து அமர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும் படிக்க..

12:19 PM IST:

நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய 1089 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டது. தகுதியுடையோர் www.tnpsc.gov எனும் இணையளத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வரும் நவ-6ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்றூ டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

11:52 AM IST:

மும்பை மாநகரின் புதிய போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் பன்சல்கரை சமீபத்தில் சந்தித்த நடிகர் சல்மான் கான், அவரிடம் தனக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கொடுக்குமாறு விண்ணப்பித்திருந்தார். தற்போது சல்மான் கானின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான லைசன்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.மேலும் படிக்க

11:04 AM IST:

புதுச்சேரியில் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி நெல் வியாபாரி ஒருவர் உடல் கருவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

11:03 AM IST:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் ஈரோட்டில் அமைந்துள்ள மேம்பாலத்தின் பெயர்ப் பலகையை சீர்செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

10:48 AM IST:

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கடலுக்கு அடியில் பேனர் வைத்த இளைஞர்
 
10:47 AM IST:

கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நம்ம சென்னை பேனருடன் செஸ் விளையாடிய வீரர்கள்!

10:38 AM IST:

கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்;- வன்முறையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஒருவர் துப்பாக்கியை தூக்கிவிட்டால் அந்த நபரிடம் துப்பாக்கியால்தான் நாமும் பேச வேண்டும். 

மேலும் படிக்க

11:28 AM IST:

கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து, அதே பள்ளிகளில் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு கருத்துருவை தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 
10:26 AM IST:

புதுச்சேரியில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்தவர் மீது 4ஆவது மனைவி போலீசில் புகார் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10:01 AM IST:

பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த், ரன்வீர் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். தான் துபாயில் இருந்து திரும்பியது முதல் எங்கு பார்த்தாலும் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட் பற்றிய பேச்சாகத் தான் இருக்கிறது. இந்த போட்டோஷூட்டில் அவர் மிகவும் ஹேண்ட்சமாக உள்ளார்.மேலும் படிக்க

9:30 AM IST:

சென்னை பெரம்பூரில் வீட்டில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

9:29 AM IST:

என்.எல்.சி. பொறியாளர் பணியிடத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு பற்றி விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. என்.எல்.சி பொறியாளர் பணியிடங்களில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 

8:32 AM IST:

தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு பால், மஞ்சள், பன்னீர், தேன் உள்ளிட்டவற்றால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், விநாயகருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 

8:02 AM IST:

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்து ரூ.2,141க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை.

மேலும் படிக்க

7:34 AM IST:

முதல் குழந்தை பிறந்து 7 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது பிரியங்கா - சோப்ரா நிக் ஜோனஸ் தம்பதி அடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ள தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் குழந்தையை போன்றே இந்த குழந்தையையும் வாடகைத் தாய் மூலமே பெற்றுக்கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளார்களாம். மேலும் படிக்க

7:34 AM IST:

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது. 

7:32 AM IST:

அதிமுக பொதுக்குழு தொடர்பாக கடந்த 6-ம் தேதி தாங்கள் வழங்கிய தீர்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல், உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:31 AM IST:

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம் வென்றுள்ளது. ஆடவர் பளு தூக்குதல் 73 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்று அசத்தியுள்ளார். 

7:30 AM IST:

புதுக்கோட்டையில் கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் ஊழியர்கள் ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சக்கரத்தில் கட்டையை போட்டு தேரை நிறுத்த முயன்று விபத்தை ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

7:21 AM IST:

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்து ரூ.2,141க்கு விற்பனை  செய்யப்படுகிறது. வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை. 

7:20 AM IST: