அனைத்து ரக நூல் விலையும் கிலோவிற்கு ரூ30 குறைவு.. ஜவுளித்துறையில் புதிய ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு..
திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.30 குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
திருப்பூரில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நேரடியாக மற்றும் மறைமுகமாக என 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் முக்கிய மூலப்பொருள் நூல். இதன் விலை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.70 வரையில் உயர்த்தப்பட்டது.
மேலும் படிக்க:அனைத்து கட்சி கூட்டம்..! அதிமுக பெயர் பலகையை ஓபிஎஸ் ஆதரவாளரிடம் இருந்து தன் பக்கம் நைசாக நகர்த்திய ஜெயக்குமார்
இதையடுத்து நூல் விலையைக் குறைக்க வலியுறுத்தி பின்னலாடை உற்பத்தியாளர் வேலை நிறுத்த போடாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நூற்பாலை சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து, கடந்த ஜூன் மாதத்தில் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்தது. ஜூலை மாதம் நூலின் விலை கிலோவுக்கு ரூ.40 விலை குறைக்கப்பட்டது.
மேலும் படிக்க:காலியாக 1,089 அரசு பணியிடங்கள்.. நவம்பர் 6 ஆம் தேதி எழுத்துத் தேர்வு.. எப்போது..? எப்படி விண்ணப்பிப்பது..?
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜவுளித்துறையில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துக்கான ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நூல் விலை ரகத்துக்கு ஏற்றபடி கிலோ ரூ.320 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யபடுகிறது என்று தெரிவிக்கின்றனர்.