Asianet News TamilAsianet News Tamil

காலியாக 1,089 அரசு பணியிடங்கள்.. நவம்பர் 6 ஆம் தேதி எழுத்துத் தேர்வு.. எப்போது..? எப்படி விண்ணப்பிப்பது..?

நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய 1089 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டது. தகுதியுடையோர் www.tnpsc.gov எனும் இணையளத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வரும் நவ-6ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்றூ டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Written exam on November 6 for 1089 vacancies - TNPSC
Author
Tamil Nadu, First Published Aug 1, 2022, 12:17 PM IST

நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய 1089 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டது. தகுதியுடையோர் www.tnpsc.gov எனும் இணையளத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வரும் நவ-6ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு தேர்வுக்கும் அடிப்படைத் தேவையான One Time Registration-ஐ ரூ.150 செலுத்தி, முன்பதிவு செய்துகொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு இந்த One Time Registration முன்பதிவு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நில அளவையர் பதவிக்கு 780 காலி பணியிடங்களும், வரைவாளர் பதவிக்கு 236 இடங்களும்  உதவி வரைவாளர் பதவிக்கு 55 இடங்களும் என மொத்தம் 10,89 இடங்கள் காலியாக உள்ளன. 

மேலும் படிக்க:1089 காலி பணியிடங்களுக்கு தேர்வு ..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? டிஎன்பிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு

இந்த பணியிடங்களுக்கு மாதந்தோறும் ஊதியமாக ரூ.19,500 யிலிருந்து ரூ.71,900 வரை வழங்கப்படும். எனவே ஆர்மும் தகுதியும் உள்ளவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த காலி பணியிடங்களுக்கு வரும் நவம்பர் 6ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கணினி வழியில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே நாளில், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுக்கான தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மக்களே அலர்ட்.. மாதந்தோறும் 1.30 லட்சம் வரை சம்பளத்தில் அரசுப் பணி.. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு..

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர பிற சமூகத்தினர் அனைவருக்கும் 32 வயதுக்குள் இருந்திருக்க வேண்டும். 

Follow Us:
Download App:
  • android
  • ios