கனமழை எதிரொலி - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

Schools holiday in Kanyakumari tomorrow due to heavy rain

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு  மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தேனி மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளது.  

Schools holiday in Kanyakumari tomorrow due to heavy rain

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

மேலும் தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில்  தென்மேற்கு பருவமழை அதிதீவிரமடைந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு  தேசிய மீட்பு படையினர்  விரைந்துள்ளனர்.  

Schools holiday in Kanyakumari tomorrow due to heavy rain

அரக்கோணம் மையத்தில் இருந்து தலா 2 பேரிடர் மீட்புப்படை குழுக்கள்  என 4 குழுவினர் சாலை மார்க்கமாக  கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு  செல்கின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios