07:54 PM (IST) Aug 07

உணவு டெலிவரி பாயாக தனுஷ்...வெளியானது திருச்சிற்றம்பலம் ட்ரைலர் !

ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் என இருவரிடமும் தனுஷ் காதல் கொள்கிறார். இதில் யார் உடனான காதலில் இவர் வெல்வார்? மற்றும் தந்தையின் பாசத்தை தனுஷ் பெறுவாரா? என்பதே படத்தின் மீதி கதையாக இருக்கும் என தெரிகிறது.

மேலும் படிக்க... உணவு டெலிவரி பாயாக தனுஷ்...வெளியானது திருச்சிற்றம்பலம் ட்ரைலர் !

07:19 PM (IST) Aug 07

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து ட்ரைலர் வெளியாகியுள்ளது...

முன்னதாக படத்தில் இருந்து வெளியான தாய் கிழவி, மேகம் கருக்காதா, லைப் ஆஃப் பழம், தேன்மொழி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின .தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க... தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து ட்ரைலர் வெளியாகியுள்ளது...

06:46 PM (IST) Aug 07

76 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்

76 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

05:18 PM (IST) Aug 07

ஹாலிவுட் பிரபலத்தை களமிறக்கிய பொன்னியின் செல்வன்...வெளியான புதிய அப்டேட்

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைக் கலவை முடித்து விட்டதாக தற்போது கிரேக் டவுன்லி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...ஹாலிவுட் பிரபலத்தை களமிறக்கிய பொன்னியின் செல்வன்...வெளியான புதிய அப்டேட்

03:57 PM (IST) Aug 07

கத்திபாரா பாலம் அருகே வழிகாட்டி பலகை பெயர்ந்து விழுந்து விபத்து - ஒருவர் பலி

சென்னை கத்திபாரா பாலம் அருகே வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் உயிரிழப்பு. மேலும் வழிகாட்டி பலகை விழுந்ததில் அரசு பேருந்து சேதமடைந்துள்ளது. வழிக்காட்டி பலகை இருபுறம் உள்ள கம்பங்களோடு சேர்ந்து விழுந்துள்ளது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர.

02:33 PM (IST) Aug 07

முதல் நாளை விட 2-ம் நாளில் 4 மடங்கு அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் துல்கர் சல்மானின் சீதா ராமம்

தமிழ் நாட்டிலும் சீதா ராமம் படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. முதல் நாளில் தமிழ்நாட்டில் 20 லட்சம் மட்டுமே வசூலித்திருந்த இப்படம் இரண்டாம் நாளில் 80 லட்சத்திற்கும் மேல் வசூலித்து 4 மடங்கு அதிக வசூல் ஈட்டி உள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படிக்க

01:57 PM (IST) Aug 07

விடாது சீறும் கேசிஆர்.. மீண்டும் மோடியுடன் மோதல்..நிதி ஆயோக் கூட்டத்தை புறகணித்து கடிதம்..

நிதி ஆயோக் அமைப்பின் ஏழாவது நிர்வாகக் கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தினால் எந்த நன்மையும் இல்லை என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இதில் பங்கேற்கபோவதில்லை என்று நிதி ஆயோக் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும் படிக்க

12:57 PM (IST) Aug 07

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் இன்றிலிருந்து தொடர்ந்து 5 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை , ஈரோடு, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

12:56 PM (IST) Aug 07

நாடாளுமன்றத்தில் ராக்கெட்ரி... பாராட்டு மழையில் மாதவன்!

நேற்று நாடாளுமன்றத்தில் சிறப்பு காட்சியாக ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் உள்ளிட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ராக்கெட்ரி... பாராட்டு மழையில் மாதவன்!

11:59 AM (IST) Aug 07

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம் தொடங்கியது. இதில் தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று உள்ளார். பீகார், கர்நாடகா முதலமைச்சர் உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. தெலுங்கான முதலமைச்சர் கேசிஆர் கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்ட அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநனர்கள் பங்கேற்றுள்ளனர்.

11:39 AM (IST) Aug 07

ஆன்லைன் விளையாட்டு.. மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் - தமிழக அரசு

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளை homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் வரும் 12 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

11:34 AM (IST) Aug 07

செயற்கைக்கோள் சிக்னல் துண்டிப்பு.. வெற்றிகரமாக விண்ணில் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை - இஸ்ரோ

எஸ்எஸ்எல்வி ராக்கேட் சற்றுமுன் விண்ணில் நிலைநிறுத்திய 2 செயற்கை கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். செயற்கை கோள்களில் இருந்து சிக்னலை பெற தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். EOS - 02, ஆஸாதிசாட் எனும் செயற்கைக்கோள்களுடன் குறைந்த எடையுள்ள எஸ்எஸ்எல்வி ராக்கேட் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் எஸ் எஸ் எல் வி ராக்கேட்டியிலிருந்து முன்னேரே செயற்கை கோள்கள் வெளியேறியதால் அதனை நிலைநிறுத்த முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இரண்டு செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

11:07 AM (IST) Aug 07

விடாது சீறும் கேசிஆர்.. மீண்டும் மோடியுடன் மோதல்..நிதி ஆயோக் கூட்டத்தை புறகணித்து கடிதம்..

நிதி ஆயோக் அமைப்பின் ஏழாவது நிர்வாகக் கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தினால் எந்த நன்மையும் இல்லை என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இதில் பங்கேற்கபோவதில்லை என்று நிதி ஆயோக் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும் படிக்க

10:31 AM (IST) Aug 07

நிர்வாணப்படுத்தி அடிக்கிறாங்க..! அலறி துடிக்கும் ஹரி நாடார்...! மனைவிக்கு பரபரப்பு கடிதம்

மோசடி வழக்கில் கைதாகி கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடாரை போலீசார் நிர்வாணமாக வீடியோ எடுத்து விசாரிப்பதாகவும்,அவர் தனது மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க...

10:21 AM (IST) Aug 07

ஏசியாநெட் நியூஸ் நடத்தும் வஜ்ர ஜெயந்தி யாத்திரைக்கான சிறப்பு போஸ்டரை வெளியிட்டார் ரஜினிகாந்த்

வஜ்ர ஜெயந்தி யாத்திரை குழுவினரை டெல்லியில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அந்த யாத்திரையின் மத்திய இந்திய பயணத்தை தொடங்கி வைத்துள்ளார். அதோடு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார் ரஜினிகாந்த். மேலும் படிக்க

10:04 AM (IST) Aug 07

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67-ல் 6 வில்லன்களாம்..!

தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் மும்பை தாதாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவரது கேரக்டர் கிட்டத்தட்ட பிகில் ராயப்பன் போன்று இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தகவல்படி இப்படத்தில் மொத்தம் 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்க்கு ஜோடியாக 2 ஹீரோயின்களும் நடிக்க உள்ளார்களாம்.மேலும் படிக்க

09:23 AM (IST) Aug 07

கல்விசார் செயற்கைக்கோள் உடன் விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ எஸ்.எஸ்.எல்.வி (SSLV) எனும் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவி உள்ளது. அந்த ராக்கெட் இஒஎஸ்-02 செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை சரியாக 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. மேலும் படிக்க

09:01 AM (IST) Aug 07

கருணாநிதி நினைவு நாள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் தொடங்கியது

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் சென்னையில் தொடங்கி உள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கி உள்ள இந்த அமைதி ஊர்வலம் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

08:57 AM (IST) Aug 07

இபிஎஸ்க்கு அதிர்ச்சி அளித்த பொதுக்குழு உறுப்பினர்கள்...! ஓபிஎஸ்யை திடீரென சந்தித்து ஆலோசித்ததால் பரபரப்பு

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இபிஎஸ் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் தேனியில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க..

08:43 AM (IST) Aug 07

இடுக்கி அணை இன்று திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று இடுக்கி அணை திறக்கப்பட உள்ளது. இதனால் முல்லை பெரியாறு கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.