மோசடி வழக்கில் கைதாகி கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடாரை போலீசார் நிர்வாணமாக வீடியோ எடுத்து விசாரிப்பதாகவும்,அவர் தனது மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடமாடும் தங்க நகைக்கடை

தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை யார் என்று கேட்டால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஹரிநாடார் தான். அந்தளவிற்கு தனது கழுத்தை, கை என பல இடங்களில் கிலோ கணக்கில் நகை அணிந்து மக்களை வியந்து பார்க்கவைத்தவர். திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தை குளத்தை சேர்ந்த ஹரி நாடார் சிறுவயதிலேயே பிழைப்புத் தேடி சென்னை வந்தார். ஆரம்பத்தில் சிறிய சிறிய கடைகளில் வேலை பார்த்த அவர், பிறகு தனியாக தொழில் ஆரம்பித்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். காலப்போக்கில் தொழில் அதிபராக உயர்ந்தார். இவர் தென்தமிழகத்தின் பிரபல ரவுடியாக அறியப்படும் ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியவர்.

முக்கியமாக நகைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் கழுத்து, கைகள் நிறைய கிலோ கணக்கில் நகைகள் அணிந்தபடி வலம் வந்தார்.பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஹரி நாடார் சீமான்-விஜயலட்சுமிக்கு இடையே நடந்து வரும் மோதலில் தலையிட்டு கருத்து கூறிய ஹரிநாடார், நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் கொடுத்ததோடு, தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இபிஎஸ்க்கு அதிர்ச்சி அளித்த பொதுக்குழு உறுப்பினர்கள்...! ஓபிஎஸ்யை திடீரென சந்தித்து ஆலோசித்ததால் பரபரப்பு

முதல் மனவி வேண்டாம்

இந்தநிலையில், பெங்களூரைச் சேர்ந்த, கட்டுமான நிறுவனர் வெங்கட் ரமணி என்பவரிடம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.7 கோடி வரை மோசடி செய்ததாக ஹரி நாடார் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹரி நாடாரை கைது செய்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஹரி நாடார் தமது முதல் மனைவி ஷாலினிக்கு அனுப்பிய கடிதத்தில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் தமக்கு ஷாலினியுடன் வாழ பிடிக்கவில்லை என்றும், இரண்டாவது மனைவி மஞ்சுவுடன் இணைந்து வாழவே தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார். மலேசியா சேர்ந்த மஞ்சுவுடன் தான் வாழ்ந்ததாகவும் தனது கைது சமயத்தில் மஞ்சு தான் தனக்கு பக்க பலமாக இருந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாணப்படுத்தி தாக்குதல்

மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும்போது, ​​தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த, பிரமாண பத்திரத்தில் ஆறு கார்கள் இருப்பதாக விசாரணையின் போது அறிந்த போலீசார், அந்த கார்களை உடனடியாக சரண்டர் செய்ய கூறியுள்ளனர். ஆனால் அந்த கார்கள் தற்போது ராக்கெட் ராஜாவிடம் உள்ளதாக கூறியுள்ளார்.

யாரையும் சும்மா விடாதீங்க! தற்கொலை செய்த கோவை மாணவி வழக்கு! 9 மாதங்களுக்கு பிறகு 2 முதியவர்கள் போக்சோவில் கைது

இதனையடுத்து ராக்கெட் ராஜாவிடம் தனது காரை தரும்படி சகோதரர் மூலம் கேட்டபோது அவர் மூன்று கார்களை மட்டும் கொடுத்துவிட்டு பிற கார்களை கொடுக்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெங்களூரு குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் தன்னை ஜட்டியுடன் நிற்க வைத்து லத்தி மற்றும் மட்டையால் கை, முதுகு பின்புறம் கடுமையாக அடித்து துன்புறுத்தினர் என்றும் வேதனையோடு தெரிவித்துள்ளார். பெங்களூரு குற்றப்பிரிவு துணை ஆணையர் முன்னிலையில் மீண்டும் தன்னை முழு நிர்வாணப்படுத்தி கடுமையாக அடித்து துன்புறுத்தியதாகவும் ஹரி நாடார் அந்த கடிதத்தில் கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தங்க நகையோடு பந்தாவாக வலம் வந்த ஹரி நாடாருக்கு இந்த நிலையா?? என அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்

மக்களே உஷார்.. பைக்குகளை ஹைடெக் முறையில் திருடும் பட்டதாரிகள் !