மக்களே உஷார்.. பைக்குகளை ஹைடெக் முறையில் திருடும் பட்டதாரிகள் !
நாளுக்கு நாள் தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் சீரான கால இடைவெளியில் இரவு நேரங்களில் திருடு போயின. காணாமல் போன இருசக்கர வாகனங்கள் கண்டுபிடித்து தருமாறு வாகன உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் , செஞ்சி துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்தி 5 கொண்ட காவல்துறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
தனிப்படையானது மேல்பாப்பாம்பாடி என்ற பகுதியில் வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த மணிவண்ணை மடக்கி ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டனர் காவல்துறையினர். அப்பொழுது மணிவண்ணன் கொடுத்து ஆவணமும் அவர் பெயரும் மாறி இருந்தன இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தபோது முன்னுக்கு முரணான பதிலை கூறியதால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் திருட்டின்போது போது கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஒத்துப்போனதால் தொடர்ந்து பட்டதாரி இளைஞர் மணிவண்ணன் (24) திருவண்ணாமலை மாவட்டம் , போளூர் தாலுக்கா , முனிவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கள்வாசல் கிராமத்தை சேர்ந்த அவரது நண்பர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை செய்வதில் போளூர் ஆரணி செஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏழு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து செஞ்சி குற்றவியல் நீதித்துறை நீதிபதி மனோகரன் முன் ஆஜர் படுத்தி விழுப்புரம் வேடம்பட்டு சிறை சாலையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு..அடிப்படை வசதி கூட இல்லை..படிப்பை கைவிடாத மாணவி - டீக்கடைக்காரர் மகள் டிஎஸ்பி ஆன கதை !