அடிப்படை வசதி கூட இல்லை..படிப்பை கைவிடாத மாணவி - டீக்கடைக்காரர் மகள் டிஎஸ்பி ஆன கதை !
அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் இருந்து படிப்பை மூலதனமாக கொண்டு டிஎஸ்பி ஆக உயர்ந்திருக்கிறார் டீக்கடைக்காரர் மகள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வேப்பங்குடி ஊராட்சி கிழக்கு செட்டியாப்பட்டி கிராமம். அங்கு டீ கடை நடத்தும் வீரமுத்து - வீரம்மாளின் 3 வது மகள் பவனியா, தற்போது குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பி யாக தேர்ச்சி பெற்றிருக்கிறார். அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரையில் படித்த பவானியா புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் தமிழ் வழியில் கணிதம் படித்துள்ளார்.
அதன்பின்னர் TNPSC-க்கு படிக்க விரும்பியுள்ள பவானியா தன் குடும்ப சூழல் காரணமாக வீட்டில் இருந்தே படிப்பை தொடர்ந்துள்ளார்.முதலில் GROUP 1 முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், பின்னர் சென்னையில் உள்ள மனிதநேயம் இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்துள்ளார். கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் படிப்பை தொடர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.. அடித்து சொல்லும் கர்நாடக ஆசிரமத்தின் ஐதீகம் - ஒர்க்அவுட் ஆகுமா ?
பின்னர் தனது முதலாவது முயற்சியிலேயே முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், டிஎஸ்பியாக பதவியேற்க இருக்கிறார். தன் குடும்ப சூழலை உணர்ந்த பவானியா விவசாய கூலி வேலைக்கு சென்றுகொண்டே தனது படிப்பை தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் TNPSC GROUP 1 தேர்வில் தனது முதலாவது முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற அவர், டிஎஸ்பியாக பதவியேற்க இருக்கிறார்.
ஆனாலும் இதோடு தனது இலக்கை நிறுத்தாத அவர், IAS அதிகாரியாக வேண்டும் என்பதே தனது கனவு என்றும் அதற்காக தொடர்ந்து படிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், 'நான் தற்போது காவல்துறையில் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகி உள்ளேன். எந்தவொரு பணியிலும் பணிக்கென்று கடமை உள்ளது. என்னால் முடிந்த அளவு மக்கள் பணியாற்றுவேன்' என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..“ஆப்ரேஷன் தாமரை 2.0 - தமிழகம் வருகிறார் அமித்ஷா.." அலெர்ட் ஆன திமுக !