அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.. அடித்து சொல்லும் கர்நாடக ஆசிரமத்தின் ஐதீகம் - ஒர்க்அவுட் ஆகுமா ?
கர்நாடக சட்டசபைத் தேர்தல் 2023ம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 150 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ளதால் இப்போதே களப்பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் நிறுவப்படவுள்ள வார் ரூம் இன் சார்ஜ் ஆக தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக ஆலோசகராக சுனில் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..“இது கேவலமா இல்ல ஜெயக்குமார்.. சிங்கம் சிங்கிளா தான் வரும்” இபிஎஸ் தரப்பை கதறவிட்ட ஓபிஎஸ் தரப்பு
இன்று சித்ரதுர்காவில் உள்ள ஜெகத் குரு ராஜேந்திர மடம் சென்று ஶ்ரீ சிவமூர்த்தி முருக சரண் அவர்களின் ஆதிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதுதொடர்பான படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மடத்தில் ஹாவேரி ஹோசமுட் சுவாமி தனது உரையின் போது, ‘ராகுல் காந்தி பிரதமராவார்’ என்று விவரமாக கூறினார். அப்போது, நிறுவனத் தலைவர் ஸ்ரீ சிவமூர்த்தி முருகா சரணார் குறுக்கிட்டு, ‘எங்கள் மடத்தை தரிசிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’ என்று கூறினார்.
இந்த ஆசிரமத்திற்கு சென்றவர்கள் பிரதமர் ஆவார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். கர்நாடக மக்கள் தொகையில் சுமார் 17 சதவீதமான லிங்காயத்துகள் பாரம்பரியமாக பாஜகவின் வாக்காளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தியின் வருகையின் மூலம் தேர்தலை சந்திக்கும் மாநிலத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைமை கட்சிக்குள் ஒற்றுமையை முன்னிறுத்தவும், கட்சியின் வளர்ச்சியை தீர்மானிக்கவும் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது.
2013 முதல் 2018 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2018 தேர்தலுக்குப் பிறகு, ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது. ஜே.டி.எஸ் தலைவர் குமாரசாமி தலைமையிலான அரசாங்கம், கூட்டணியில் இருந்து பல எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த ஒரு வருடத்தில் சரிந்தது. அதன் பிறகு பாஜக மீண்டும் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தது. பாஜக முதலில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பி.எஸ் எடியூரப்பாவை முதல்வராக்கியது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !
கடந்த ஆண்டு அவருக்கு பதிலாக அதே சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மையை நியமித்தது. கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் ஏகப்பட்ட மோதல்கள் நிலவுவது தலைமைக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவிக்கு சட்டப்பேரவை கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டி.கே சிவக்குமார் இருவரும் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
செவ்வாய்கிழமை நடந்த அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்திஇதை வலியுறுத்தி பேசியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், ‘தலைமைப் பிரச்னையே இல்லை. தனி நபர் கருத்தும் ஏற்கத்தக்கது அல்ல. வெற்றி பெற்ற பின் தலைவரை கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்களும், உயர்மட்டக் குழுவும் முடிவு செய்யும்’ என்று கூறினார்.
இதில் ராகுல் காந்தி மற்றும் திரு வேணுகோபால் ஆகியோரை தவிர, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார், கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவர் எம்.பி. பாட்டீல், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் மூத்த தலைவர்களான எச்.கே.பாட்டீல், தினேஷ் குண்டுராவ், எம்.வீரப்ப மொய்லி மற்றும் ஜி.பரமேஸ்வரா போன்றோரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..தேதி குறித்த நீதிமன்றம்.. அதிமுக பொதுக்குழு செல்லுமா ? பரபரப்பில் இபிஎஸ் Vs ஓபிஎஸ் !