Asianet News TamilAsianet News Tamil

“ஆப்ரேஷன் தாமரை 2.0 - தமிழகம் வருகிறார் அமித்ஷா.." அலெர்ட் ஆன திமுக !

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Union Home Minister Amit Shah is coming to Tamil Nadu on 29th
Author
First Published Aug 5, 2022, 3:34 PM IST

செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா கலந்து கொள்வதற்காகவே சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் மோடி வந்தார். செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி காரில் நேராக ஆளுநர் மாளிகை சென்றடைந்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் 30 நிமிடம் அவர் ஓய்வு எடுத்தார். 

Union Home Minister Amit Shah is coming to Tamil Nadu on 29th

மேலும் செய்திகளுக்கு..என் அக்கவுண்ட்ல 2,700 கோடியா.. செங்கல் சூலை தொழிலாளருக்கு அடிச்ச லக்.. கடைசியில் பாவம்யா ?

இதற்கு பின்புதான் கிண்டி ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை செய்தார். சுமார் 40 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடைபெற்றது. பாஜக மூத்த தலைகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். இதில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிரான புகார் பட்டியல், அதிமுகவில் நடைபெற்று வரும் ஒற்றை தலைமை பிரச்னை என்ற பெரிய பட்டியல் கொடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

நம் நாட்டில் உள்ள 31 மாநிலங்களில்  பாஜக  18 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது.   2 மாநிலங்களில்  மட்டுமே  காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.  மற்ற மாநிலங்களில் குறிப்பாக அடுத்து வரும் தேர்தல்களில் வெற்ற பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29ம் தேதி ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு..அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.. அடித்து சொல்லும் கர்நாடக ஆசிரமத்தின் ஐதீகம் - ஒர்க்அவுட் ஆகுமா ?

Union Home Minister Amit Shah is coming to Tamil Nadu on 29th

தமிழக பாஜகவின் சார்பில் திருச்சி, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக பாஜக மாவட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனை திறந்து வைக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29 ஆம் தேதி ஒருநாள் பயணமாக கோவை வருகிறார் என்றும், அங்கிருந்தபடியே காணொலி காட்சி மூலமாக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அமித்ஷாவின் வருகையின் போது பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். அதுமட்டுமின்றி தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் எப்படி என்று ஆலோசனை செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..அதிமுக வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி - எடப்பாடி டீம் ஹேப்பி !

Follow Us:
Download App:
  • android
  • ios