ஹாலிவுட் பிரபலத்தை களமிறக்கிய பொன்னியின் செல்வன்...வெளியான புதிய அப்டேட்
ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைக் கலவை முடித்து விட்டதாக தற்போது கிரேக் டவுன்லி தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் மணிரத்தினத்தின் பல ஆண்டு கனவு படமாகும். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கானுகிறது இதன் முதல் பாகம்.
ponniyin selvan teaser event
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றன.
மேலும் செய்திகளுக்கு...ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை காண வருகை தந்த நடிகர் மோகன்லால்...!
படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இசைப் பணிகள் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைக் கலவை முடித்து விட்டதாக தற்போது கிரேக் டவுன்லி தெரிவித்துள்ளார்.
PS1
ஹாலிவுட் ஒலி வடிவமைப்பாளரான கிரேக் டவுன்லி அவெஞ்சர்ஸ், டியூன் உள்ளிட்ட பிரபல படங்களுக்கு ஒலி கலவை செய்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் காட்சி யுடன் சவுண்ட் மிக்சிங் ஸ்டுடியோவில் இருந்து இவர் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு பணி நிறைவடைந்தது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...தயாரிப்பாளர்கள் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு..அரசியல் சூழ்ச்சியா? கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?
PS1
இப்படத்தின் முதல் சிங்கிள் பொன்னியின் நதி கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சென்னையில் உள்ள பிரபலமாவில் மாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் அடுத்த பாடல் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...அஜய் தேவ்கனுடன் குஷ்பு..என்ன விஷயம் தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.