- Home
- இந்தியா
- ஏசியாநெட் நியூஸ் நடத்தும் வஜ்ர ஜெயந்தி யாத்திரைக்கான சிறப்பு போஸ்டரை வெளியிட்டார் ரஜினிகாந்த்
ஏசியாநெட் நியூஸ் நடத்தும் வஜ்ர ஜெயந்தி யாத்திரைக்கான சிறப்பு போஸ்டரை வெளியிட்டார் ரஜினிகாந்த்
வஜ்ர ஜெயந்தி யாத்திரை குழுவினரை டெல்லியில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அந்த யாத்திரையின் மத்திய இந்திய பயணத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தின் 75 வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏசியாநெட் நியூஸ் மற்றும் என்.சி.சி. இணைந்து வஜ்ர ஜெயந்தி யாத்திரையை நடத்தி வருகின்றன. இதன்மூலம் நாட்டின் சுதந்திர போராட்ட நினைவுச் சின்னங்கள், ராணுவ தளங்கள், விவசாயம், கலாச்சாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களை ஆய்வு செய்யும் பயணமும் மேற்கொண்டு வருகின்றனர்.
வஜ்ர ஜெயந்தி யாத்திரையின் மத்திய இந்திய பயணத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி வைத்துள்ளார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்காக டெல்லி சென்றுள்ள ரஜினிகாந்த், அங்குள்ள அசோகா எனும் ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது அதே ஹோட்டலில் தங்கியிருந்த வஜ்ர ஜெயந்தி யாத்திரை குழுவினர் ரஜினிகாந்தை சந்தித்தனர்.
அப்போது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்ட ரஜினிகாந்த், வஜ்ர ஜெயந்தி யாத்திரையின் மத்திய இந்திய பயணத்தை தொடங்கி வைத்தார்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் சுதந்திர போராட வீரர்களை நினைவு கூறும் வகையில் ஏசியாநெட் நியூஸ் நிறுவனம் வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.