ஒன்னில்ல... இரண்டில்ல.. மொத்தம் 6 வில்லன்களாம்! தளபதி 67-ல் தரமான சம்பவம் செய்யப்போகும் லோகேஷ் கனகராஜ்
Thalapathy 67 : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக 6 பேர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய நான்கு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இதனால் இவர் அடுத்தடுத்து இயக்க உள்ள படங்கள் மீதான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அடுத்ததாக இவர் கைவசம் தளபதி 67, கைதி 2, விக்ரம் 2, இரும்புக்கை மாயாவி என நான்கு படங்கள் உள்ளன. இதில் முதலாவதாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே விஜய் உடன் மாஸ்டர் படத்தில் பணியாற்றியுள்ள லோகேஷ், இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக அவருடன் இணைய உள்ளார்.
தற்போது வாரிசு படத்தில் நடித்துவரும் விஜய், அப்படத்தில் நடித்து முடித்த பின் தளபதி 67-ல் இணைய உள்ளார். இந்த மாதம் தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 படத்தை கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக எடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம்.
இதையும் படியுங்கள்... தமிழிசையோட மருமகன் தான் லெஜண்ட் சரவணனா...! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே
இப்படத்தில் நடிகர் விஜய் மும்பை தாதாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவரது கேரக்டர் கிட்டத்தட்ட பிகில் ராயப்பன் போன்று இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தகவல்படி இப்படத்தில் மொத்தம் 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்க்கு ஜோடியாக 2 ஹீரோயின்களும் நடிக்க உள்ளார்களாம்.
வில்லன்களைப் பொறுத்தவரை கே.ஜி.எஃப் 2 பட வில்லன் சஞ்சய் தத் மற்றும் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் மட்டும் தற்போது உறுதியாகி உள்ளதாகவும், இதர 4 வில்லன்களை தேர்வு செய்யும் படலம் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... குஷ்புவை தொடர்ந்து... பிரபல நடிகைகள் வீட்டுக்கு 3 குழந்தைகளுடன் விசிட் அடித்த ரம்பா! இது தான் காரணமா?