குஷ்புவை தொடர்ந்து... பிரபல நடிகைகள் வீட்டுக்கு 3 குழந்தைகளுடன் விசிட் அடித்த ரம்பா! இது தான் காரணமா?
நடிகை ரம்பா கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பிரபல நடிகை குஷ்பு-வின் குடும்பத்தினரை குழந்தைகளோடு சென்று சந்தித்த புகைப்படங்கள் வைரலானது. இதை தொடர்ந்து மேலும் இரண்டு நடிகைகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...
90களில் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே நடுவராக பங்கேற்று வருகிறார். அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளுடன் புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ள இவர், பிரபல நடிகைகள் வீட்டு பூஜையில் கலந்து கொண்ட போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகையாக இருந்த ரம்பா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், இந்திரகுமார் பத்மநாதன் என்கிற இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் செய்திகள்: விஜய் சேதுபதியுடன்... இந்த பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய மாளவிகா மோகனன்..! வைரலாகும் போட்டோஸ்!
திருமணத்திற்கு பின்னர் வழக்கமான குடும்ப பிரச்சனைகளில் ரம்பா சிக்கிய போதும்... ஒருவழியாக அதில் இருந்து மீண்டு மீண்டும் கணவருடன் இணைந்தார். தற்போது இந்த தம்பதி 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், நடிகை ரம்பா தன்னுடைய 2 மகள்கள் மற்றும் மகனுடன் நடிகை குஷ்பு-வின் வீட்டிற்கு சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேறு லெவலுக்கு வைரல் ஆனது.
மேலும் செய்திகள்: கோவில்களை விட சூர்யா அறக்கட்டளை முக்கியமானதா? வாயை விட்டு சிக்கிய சூரி.. வச்சு செஞ்ச பயில்வான் !
இதை தொடர்ந்து பிரபல நடிகைகள் வீட்டில் நடந்த வரலட்சுமி பூஜையில் குழந்தைகளுடன் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.
அழகிய பட்டு புடவையில் ரம்பா ஜொலிக்கிறார். அதே போல் இவருடைய மகன் மற்றும் மகள்களும் ஒரே மாதிரியான ட்ரெடிஷனல் பாவாடை சட்டையில் இருக்கின்றனர்.
மேலும் செய்திகள்: என்ன தான் பிரச்சனை ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு? தனுஷை விவாகரத்து செய்தபின் கோவில் கோவிலாக சுத்துறாங்களே!
பார்பவர்களையே பொறுமை படுத்தும் அளவுக்கு, மிகவும் கியூட் குழந்தைகளுடன்... வரலட்சுமி பூஜையில் ரம்பா கலந்து கொண்டுள்ளார். அந்த போட்டோஸ் இதோ...