விஜய் சேதுபதியுடன்... இந்த பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய மாளவிகா மோகனன்..! வைரலாகும் போட்டோஸ்!
நடிகை மாளவிகா மோகனனின் பிறந்தநாள் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனனை அவரது பிறந்தநாள் அன்று சந்தித்து, தன்னுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய 'கைதி' திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது.
மேலும் செய்திகள்: கோவில்களை விட சூர்யா அறக்கட்டளை முக்கியமானதா? வாயை விட்டு சிக்கிய சூரி.. வச்சு செஞ்ச பயில்வான் !
'மாஸ்டர்' என்ற பெயரில் உருவான இந்த திரைப்படத்தில், ஜேடி என்கிற கதாபாத்திரத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்தார் விஜய். பவானி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், ஹீரோயினாக அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகை மாளவிகா மோகனன்.
மாஸ்டர் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில்... மாளவிகா மோகனனுக்கு, கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவானது. கண்டமேனிக்கு கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் மாளவிகா மோகனன் நடிப்பில், தமிழில் கடைசியாக வெளியான 'மாறன்' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
மேலும் செய்திகள்: கோவில்களை விட சூர்யா அறக்கட்டளை முக்கியமானதா? வாயை விட்டு சிக்கிய சூரி.. வச்சு செஞ்ச பயில்வான் !
தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். சில தமிழ் படங்களில் இவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாளவிகாவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 4ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், தன்னுடைய நண்பர்கள் மற்றும் நெருக்கமான சில பிரபலங்களுக்கு மும்பையில் பார்ட்டி கொடுத்தார். இதில் கலந்து கொள்ள விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டவே அவர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
அப்போது மாஸ்டர் பவானியுடன் மாளவிகா மோகனன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மாஸ்டர் ரியூனியனா? என பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: சினேகா வீட்டு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.! வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்.!
விஜய் சேதுபதியை தவிர சில பாலிவுட் பிரபலங்களும், மாளவிகா மோகனனின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய பிறந்தநாளில் ஒரு பக்கம் கை இல்லாத ஸ்லீவ் லெஸ் மாடர்ன் உடையில்... செம்ம ஹாட்டாக இருக்கிறார் மாளவிகா. இவரது அழகை வர்ணித்து நெட்டிசன்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.