கோவில்களை விட சூர்யா அறக்கட்டளை முக்கியமானதா? வாயை விட்டு சிக்கிய சூரி.. வச்சு செஞ்ச பயில்வான் !
கல்வி அறக்கட்டளையையும், இந்து கோவிலையும், இணைத்து பேசிய நடிகர் சூரியை வன்மையாக கண்டித்து, பிரபல நடிகரும் சினிமா விமர்சருகமான பயில்வான் ரங்கநாதன் வீடியோ வெளியிட்டு விளாசியுள்ளார்.
நடிகர் கார்த்தி - அதிதி ஷங்கர் நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி உள்ள 'விருமன்' திரைப்படம், ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சில தினங்களுக்கு முன்பு, மதுரையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த இந்த படத்தின் நாயகன் கார்த்தி, நாயகி அதிதி ஷங்கர், இயக்குனர் ஷங்கர் மற்றும் அவரது மனைவி, நடிகர் சூர்யா, காமெடி நடிகர் சூரி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசியது தான் தற்போது அவரை பிரச்சனையில் சிக்கவைத்துள்ளது.
சூரியின் பேச்சை கண்டித்து, இந்து அமைப்பை சேர்ந்த பலர் தொடர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், தற்போது சூரிக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன். இந்த வீடியோவில், "இந்து கோவில்களும்... கல்வி அறக்கட்டளையும் ஒன்றாக இணைத்து பேசும் சூரி, ஏன் கிறிஸ்தவர்களின் சர்ச், இஸ்லாமியர்களின் மசூதி, போன்றவற்றை பற்றி பேசவில்லை.
மேலும் செய்திகள்: கமல்ஹாசன் இங்க பிறக்கவேண்டிய ஆளே கிடையாது... டிஸ்கோ சாந்தி என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?
அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டுவதை விட என கூறியிருக்கிறார் சூரி, ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் இருந்து இப்போது வரை பலருக்கும் அவரது திட்டம் தான் உணவளித்து வருகிறது. இது சூரிக்கு தெரியாதா?அவர் இப்போது ஒரு ஹோட்டலை வைத்து நடத்தி வருகிறார். ஆனால் ஒரு காலத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட அவரும் கஷ்டப்பட்டவர் தான். அதனால் இன்றைக்கு அன்னச்சத்திரம் கட்டுவதும், கோவில் கட்டுவதும், அவருக்கு தவறாக தெரியலாம். ஏன் இப்படி பேச வேண்டும், நீங்களும் ஒரு ஹிந்து தானே என கேள்வி எழுப்பி உள்ளார்.
இப்போதைக்கு அதிகம் கோயிலை யார் கட்டி வருகிறார்கள்? உண்மையில் பழமையும், சிறப்பும் வாய்ந்த கோயில்களை நம்முடைய அரசர்கள் அதிக கோவிலை கட்டினார்கள். வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் கூட, முதலில் பார்ப்பது சினிமாவியோ அல்லது உங்களுடைய ஸ்டூடியோவையோ, கல்வி சேவையோ இல்லை. வருபவர்கள் எல்லாம் எங்கே மதுரை கோயில், தஞ்சாவூர் கோயில், போன்ற கோவில்களை பார்த்து வியப்படைகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே எந்த ஒரு இன்ஜினியர், மற்றும் டெக்னாலஜிகள் இல்லாமல் இப்படி ஒரு அற்புதமான கோவில்களை தமிழன் கட்டி உள்ளான் என்பதை தான் பார்க்கிறார்கள்.
மேலும் செய்திகள்: என்ன தான் பிரச்சனை ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு? தனுஷை விவாகரத்து செய்தபின் கோவில் கோவிலாக சுத்துறாங்களே!
கோவில்கள் ஒரு புராதான சின்னம். தமிழக அரசின் லோகோ கூட ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் தான். ஆனால் நீ முட்டாள் மாதிரி பேசுகிறாய். ஒரு கோவிலை தமிழக அரசு தன்னுடைய லோகோவாக வைத்திருந்தால் கோவில்களுக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது இதிலிருந்து தெரிய வேண்டாமா? நீ எப்படி கோவில் கட்ட வேண்டாம் எனக் கூறுவாய்? இந்துக் கோவிலை கட்டுவதை விட சூர்யாவின் அறக்கட்டளை உனக்கு பெரிதாக போய்விட்டதா? இதெல்லாம் தேவையில்லை சூரி.. பார்த்துக்கோ. ஏற்கனவே கஷ்டப்பட்டதையும் நினைத்துப் பார்க்கணும். இன்று ஆண்டவன் அருளால் நீ நன்றாக இருக்கிறாய் அதற்க்கு கடவுளுக்கு நன்றி சொல். கோவில் கட்டுவதை விட, அன்னச்சத்திரம் கட்டுவதை விட, அவர் படிக்க வைக்கிறார் என கூறாதே. நீ படிச்சிருக்கியா நீ படித்து விட்டு தான் இந்த திரையுலகிற்கு வந்தாயா? என வச்சு செய்துள்ளார். இவரது இந்த பேச்சு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
மேலும் செய்திகள்: சினேகா வீட்டு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.! வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்.!