MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தமிழிசையோட மருமகன் தான் லெஜண்ட் சரவணனா...! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே

தமிழிசையோட மருமகன் தான் லெஜண்ட் சரவணனா...! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே

Legend saravanan : தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான பின்னர் பரபரப்பாக பேசப்பட்டு வரும் லெஜண்ட் சரவணன், தமிழிசை சவுந்தரராஜனின் உறவினர் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Aug 07 2022, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தி லெஜண்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தொழிலதிபர் சரவணன் அருள். வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரும் இவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நாயகிகளுடன் ஆட்டம் போட்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இதையடுத்து சினிமாவில் நுழைய முடிவெடுத்த சரவணன், புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதன் முதல் படமான தி லெஜண்ட் படத்தில் தானே ஹீரோவாக நடிக்க உள்ளதையும் அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.

35

ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரபு, விஜயகுமார், விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... குழந்தை பெற்ற பிறகும் குறையாத கிளாமர்... கடற்கரையில் விதவிதமான கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை விஜயலட்சுமி

45

இவ்வாறு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் கடந்த மாத இறுதியில் திரையரங்கிலும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. உலகமெங்கும் 2500 தியேட்டர்கள், அதிகாலை 4 மணி காட்சி என மாஸ் நடிகர்களுக்கு இணையாக தி லெஜண்ட் திரைப்படமும் வெளியானது. ரிலீசானது முதல் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

55

இந்நிலையில், லெஜண்ட் சரவணனும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் உறவினர்கள் என்கிற தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி லெஜண்ட் சரவணனின் மனைவிக்கு, தமிழிசையின் அம்மா சித்தி உறவாம். அதன்படி பார்த்தால் லெஜண்ட் சரவணன், தமிழிசைக்கு மருமகன் முறை வருகிறது. இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே என வியப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... போதைக்கு அடிமையான நடிகை... தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழிசை சௌந்தரராஜன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image2
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Recommended image3
Kara OTT Release : ஓடிடிக்கு வரும் கர... தியேட்டரில் வாரிசுருட்டிய ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved