காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத், தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான காளி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். இதையடுத்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

இதன்பின்னர் பேரழகி, தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற படங்களில் நடித்த இவர், அடுத்ததாக நடித்து வரும் படம் . நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இந்த படத்தை ஹரூன் என்பவர் இயக்கி உள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்... முஸ்தஃபா முஸ்தஃபா முதல் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் இருந்து 5 பெஸ்ட் பாடல்கள்..ஃப்ரெண்ட்ஷிப் டே ஸ்பெஷல்

View post on Instagram

இந்த படத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் போதைப் பழக்கத்துக்கு அடிமையான பெண்ணாக நடித்துள்ளார். தற்போது வெளியாகி இருக்கும் இப்படத்தின் ஸ்னீக் பீக்கில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் போதைப் பொருட்களை உட்கொள்வது போலவும், சிகரெட் பிடிக்கும் படியான காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.

இந்த ஸ்னீக் பீக் காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஷில்பா மஞ்சுநாத், இதன் ஒவ்வொரு காட்சியையும் என்ஜாய் பண்ணி நடித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும், தயவு செய்து இவ்வாறு நடிக்க வேண்டாம் என்றும் அவரிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சக்சஸ் மீட்டா?... இல்லேனா அடுத்த பட அறிவிப்பா? - லெஜண்ட் சரவணன் போட்ட ஒரே டுவிட்டால் குழம்பிப்போன ரசிகர்கள்