சக்சஸ் மீட்டா?... இல்லேனா அடுத்த பட அறிவிப்பா? - லெஜண்ட் சரவணன் போட்ட ஒரே டுவிட்டால் குழம்பிப்போன ரசிகர்கள்
Legend Saravanan : தி லெஜண்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததன் காரணமாக ஒரே வாரத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து துக்கப்பட்டுவிட்டது.
கோலிவுட்டில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்ட பெயர் என்றால் அது லெஜண்ட் சரவணன் தான். இதற்கு காரணம் அவர் நடித்த தி லெஜண்ட் படம். இப்படத்தை புரமோட் செய்தது முதல் வெளியிட்டது வரை ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக பில்டப் கொடுக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி இப்படத்தை தமிழ் தவிர இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட்டனர். இவ்வளவு பிரம்மாண்டமாக புரமோட் செய்தும் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 2500 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இப்படம், தமிழ்நாட்டில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள்... முஸ்தஃபா முஸ்தஃபா முதல் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் இருந்து 5 பெஸ்ட் பாடல்கள்..ஃப்ரெண்ட்ஷிப் டே ஸ்பெஷல்
ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததன் காரணமாக ஒரே வாரத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து துக்கப்பட்டுவிட்டது. அதற்கு பதில் இந்த வாரம் ரிலீசான குருதி ஆட்டம், சீதா ராமம், காட்டேரி போன்ற படங்கள் பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லெஜண்ட் சரவணன், ஊடக நண்பர்களுக்கு வணக்கம்…உங்கள் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் மனமார்ந்த நன்றி, விரைவில் சந்திக்கிறேன்... சந்திக்கிறோம்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட உள்ளதை தான் இதன்மூலம் குறிப்பிட்டுள்ளாரா? அல்லது தி லெஜண்ட் படத்துக்கு சக்சஸ் மீட் எதுவும் வைக்கப்போகிறாரா? என்பது தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஒன்னில்ல... இரண்டில்ல.. மொத்தம் 6 வில்லன்களாம்! தளபதி 67-ல் தரமான சம்பவம் செய்யப்போகும் லோகேஷ் கனகராஜ்