- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரோகிணி... மனோஜ் இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரோகிணி... மனோஜ் இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை தனியாக ஒரு ஹோட்டலுக்கு அழைத்துள்ள ரோகிணி, அவரிடம் ஒரு பேப்பரை நீட்டி கையெழுத்து போட சொல்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி அனுப்பிய பெண் சாமியார் விஜயாவின் வீட்டுக்கு வந்து பூஜை ஒன்றை நடத்தி, இந்த வீட்டிற்கு மீனாவால் ஆபத்து வர இருப்பதாகவும், அவர் மட்டும் வீட்டில் இருந்தால் விஜயாவின் கணவர் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சொல்கிறார். இதனால் பதறிப்போன விஜயா, மீனாவை எப்படியாவது இந்த வீட்டை விட்டு விரட்டிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சுத்துகிறார். அதற்காக பார்வதியை சந்தித்து பேச சென்றிருக்கிறார் விஜயா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பார்வதியிடம் உதவி கேட்கும் விஜயா
பார்வதியும் சிவனும் தங்கள் யூடியூப் சேனலுக்காக ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மூட நம்பிக்கைக்கு எதிரான அந்த கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போது எண்ட்ரி கொடுக்கிறார் விஜயா. அவர் பார்வதியிடம், தன் வீட்டிற்கு வந்த பெண் சாமியார் சொன்ன விஷயங்களை பற்றி கூறுகிறார். மீனாவை நீதான் பேசி எப்படியாவது வீட்டை விட்டு வெளியே அனுப்பணும் என கூறுகிறார் விஜயா. இப்போ தான் நான் மூட நம்பிகைக்கு எதிராக ஒரு கதை சொல்லிருக்கேன். இதெல்லாம் நம்பாத, நீ சொல்லுற மாதிரியெல்லாம் என்னால் வந்து உன் வீட்டில் பேச முடியாது என சொல்லிவிடுகிறார் பார்வதி.
வீட்டில் பரிகாரம் செய்யும் மீனா
இதையடுத்து அங்கிருந்து கிளம்புகிறார் விஜயா. அவர் வீட்டுக்கு சென்றபோது வீடு முழுக்க மீனா விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார். எதுக்காக இப்படி செய்கிறீர்கள் என அண்ணாமலை கேட்க, அப்போது முத்து, மீனா ஒரு ஜோதிடரை பார்த்ததை பற்றி கூறுகிறார். அவர் வில்வை இலையால் விளக்கு ஏற்றினால், வீட்டில் இருக்கும் பெரியவங்களுக்கு நல்லதுனு சொல்லிருக்காங்க. அதனால ஏத்திகிட்டு இருக்கா என கூறுகிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த விஜயா, தான் மறுபடியும் அந்த சாமியாரை பார்த்ததாகவும், அவர் சொல்வதெல்லாம் பழிக்குது. அதனால் இவளை வீட்டில் இருந்து வெளிய போக சொல்லுங்க என சொல்ல, உடனே அண்ணாமலை மீனா இங்க இருந்து போனா, நானும் போயிடுவேன் என சொல்ல, விஜயா அப்படியே ஆஃப் ஆகிறார்.
ரோகிணியிடம் சிக்கிக் கொண்ட மனோஜ்
மறுபுறம் மனோஜ், ரோகிணியின் பேச்சைக் கேட்டு அவர் அழைத்த இடத்துக்கு செல்கிறார். அங்கு சென்றதும் மனோஜ் நீ கேட்டபடி நான் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுக்குறேன். ஆனால் அதன் பின் இங்க இருக்க ஃபேன்ல தூக்கு மாட்டி செத்துருவேன் என மிரட்டுகிறார். இதைக்கேட்டதும் பதறிப்போன மனோஜ், நான் என்ன தான் செய்யணும் என கேட்கிறார். உடனே தன்னிடம் இருந்த ஃபைல் ஒன்றில் இருந்து பேப்பரை எடுத்து நீட்டுகிறார் ரோகிணி. அந்த பேப்பரில், தான் ரோகிணியோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என எழுதி இருக்கிறது. இதில் கையெழுத்து போடாவிட்டால் செத்துவிடுவேன் என மிரட்டுகிறார் ரோகிணி.
தப்பினாரா மனோஜ்?
என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கும் மனோஜ், பாத்ரூமுக்குள் செல்கிறார். அங்கிருந்து தன்னுடைய அம்மா விஜயாவுக்கு போன் போட்டு, ரோகிணி தன்னை பிளாக்மெயில் செய்யும் விஷயத்தை பற்றி கூறுகிறார். நீ எதுக்குடா அவ கூப்பிட்டானு போன என திட்டுகிறார் விஜயா. இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்தது. இதன்பின்னர் என்ன ஆனது? மனோஜ், ரோகிணி கொடுத்த பேப்பரில் கையெழுத்து போட்டாரா? இல்லையா? விஜயா மனோஜை காப்பாற்றினாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் விடை கிடைக்கும்.

