- Home
- Cinema
- தொலைக்காட்சி
- டைவர்ஸ் கொடுக்குறேன் ஆனா ஒரு கண்டிஷன்... ரோகிணி விரித்த வலையில் சிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
டைவர்ஸ் கொடுக்குறேன் ஆனா ஒரு கண்டிஷன்... ரோகிணி விரித்த வலையில் சிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜிடம் போன் போட்டு பேசும் ரோகிணி, டைவர்ஸ் கொடுக்க ஒரு கண்டிஷன் உடன் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வீட்டுக்கு வந்து பூஜை பண்ணிய பெண் சாமியார் மீனாவால் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரை இந்த வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் ஒரு குண்டை தூக்கி போட்டு சென்று இருக்கிறார். அந்தப் பெண் சாமியாரின் பேச்சை உண்மை என நம்பி விஜயாவும் பதறிப் போய் இருக்கிறார். அந்த போலி சாமியாரை வீட்டுக்கு அனுப்பியது வேறு யாருமில்லை சிந்தாமணி தான். ஆனால் இந்த விஷயம் விஜயாவுக்கு தெரியாது. அவர் தன் தாலிக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்கிற பயத்தில் இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மீனாவை வீட்டை விட்டு போகச் சொல்லும் விஜயா
மீனா இங்கே இருந்தால் என்னுடைய தாலிக்கு தான் ஆபத்து அவளை உடனே வெளியே அனுப்புங்க என ஒற்றைக்காலில் நிற்கிறார் விஜயா. இதனால் கண்ணீர் விட்டு அழுகிறார் மீனா. தன் மனைவியை வெளியே அனுப்ப சொல்லும் விஜயாவிடம் அந்த பெண் சாமியார் ஒரு டுபாக்கூர் அவர் சொல்வதெல்லாம் நடக்காது என கூறுகிறார் முத்து. அப்போது அங்கிருந்து மனோஜ் அதெல்லாம் இல்லை ஒரு நாள் அந்தப் பெண் தன்னுடைய ஷோரூமுக்கு வந்திருந்ததாகவும் என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் புட்டு புட்டு வைத்ததாகவும் சொல்கிறார். அண்ணாமலையும் இதையெல்லாம் நம்பாதே இது வெறும் மூடநம்பிக்கை என சொல்லி பார்க்கிறார் ஆனால் விஜயா அதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
விஜயாவை பயமுறுத்திய சிந்தாமணி
இதையடுத்து ரூமுக்குள் செல்லும் விஜயாவுக்கு சிந்தாமணியிடமிருந்து ஃபோன் வருகிறது. அப்போது அழுதுகொண்டு விஜயா பேசுவதை கேட்டு என்னாச்சு மாஸ்டர் என சிந்தாமணி கேட்க, விஜயா வீட்டில் நடந்த விஷயங்களை சொல்கிறார். உடனே சிந்தாமணியும் அய்யய்யோ அந்த சாமியார் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க அவங்க சொன்னதை லேசாக நினைக்காதீங்க, முதலில் அந்த மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் வேலையை பாருங்க என தன் பங்கிற்கு ஏற்றி விடுகிறார். விஜயாவிடம் நல்லவள் போல் வேஷம் போடும் சிந்தாமணி, அவரை நாளைக்கு நான் சொல்லும் கோயிலுக்கு வாங்க என அழைக்கிறார். விஜயாவும் நான் வருகிறேன் என சொல்லிவிட்டு போனை கட் பண்ணுகிறார்.
மீனாவை சமாதானப்படுத்தும் முத்து
மறுபுறம் மீனாவும் ரூமுக்குள் சென்று சோகமாக நின்று கொண்டிருக்கிறார். அவரிடம் போய் பேசும் முத்து, என்ன யோசிச்சிட்டு இருக்க என கேட்க அதற்கு மீனா தனக்கு குழப்பமாக இருப்பதாக சொல்கிறார். அந்த சாமியார் சொன்னதை நம்புவதா இல்லை நம்பாமல் இருப்பதா என தெரியவில்லை என்று மீனா சொல்ல, அதெல்லாம் நம்பாத அது பிராடு பொம்பள என கூறுகிறார் முத்து. நம்ம கல்யாணத்தில் நடந்தது, நம்ம வீட்டில் நடந்தது என எல்லாத்தையும் அவங்க கரெக்டா சொன்னாங்க இல்ல, அதனாலதான் மாமாவை பத்தி சொன்னதும் நடந்திருமோ என எனக்கு பயமாக இருக்கிறது என்று மீனா கூறுகிறார். அதெல்லாம் ஒன்னும் ஆகாது என சொல்லி முத்து அவரை சமாதானப்படுத்துகிறார்.
விஜயாவிடம் மனோஜ் சொன்ன ரகசியம்
இதையடுத்து விஜயாவின் ரூமுக்கு சென்ற மனோஜ், ஒரு நாள் அந்த சாமியார் தன்னுடைய ஷோரூம்-க்கு வந்த விஷயத்தை சொல்கிறார். அங்கு வந்து தனக்கு இரண்டாவது கல்யாணம் ஆகும் என்று அவர் சொன்னதாக சொல்ல, உனக்காவது நல்லதா சொல்லி இருக்காங்களே என விஜயா கூற, ஐயோ அம்மா அவங்க எனக்கு இரண்டாவது கல்யாணமும் ரோகிணியுடன் தான் ஆகும் என சொன்னார் என்பதை கூறுகிறார் மனோஜ். என்னடா சொல்ற என ஷாக் ஆகும் விஜயா, அந்த மாதிரி நடக்க நான் ஒருபோதும் விடமாட்டேன் என கூறுகிறார். அவங்க சொன்னது நடக்கக்கூடாது அதை நீ தான் எப்படியாவது தடுத்து நிறுத்தணும் என விஜயாவிடம் மனோஜ் கேட்க, அதற்கு விஜயா, டேய் மனோஜ் முதல்ல நான் என் தாலியை காப்பாத்திக்குறேன், அதுக்கப்புறம் உன்னுடையதை பார்க்கலாம் எனக் கூறுகிறார்.
ரோகிணியின் டீலுக்கு ஓகே சொன்ன மனோஜ்
பின்னர் இரவில் பெட்டில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டிருந்த மனோஜ்-க்கு ரோகினியிடமிருந்து கால் வருகிறது. அதை எடுத்து அவர் பேசுகையில் சிவராத்திரி என்கிற பாடலை பாடி மனோஜை கடுப்பேத்துகிறார் ரோகிணி. பின்னர் நீ என்னதான் என்னை மயக்க நினைத்தாலும் நான் உன் பக்கம் வரமாட்டேன் என கூறுகிறார் மனோஜ். அவரிடம் நான் உனக்கு டைவர்ஸ் கொடுக்க ரெடி, ஆனால் அதற்கு ஒரு கண்டிஷன் இருக்கிறது. நான் சொல்லும் இடத்திற்கு நீ தனியாக வரவேண்டும் நீ அங்கு வரும் விஷயத்தை உன்னுடைய அம்மாவுக்கும் சொல்லக்கூடாது. அங்கு வந்தால் உனக்கு நான் டைவர்ஸ் கொடுத்து விடுகிறேன் என ரோகினி சொல்ல, மனோஜும் அந்த டீலுக்கு ஓகே சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

