Asianet News TamilAsianet News Tamil

உணவு டெலிவரி பாயாக தனுஷ்...வெளியானது திருச்சிற்றம்பலம் ட்ரைலர் !

ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் என இருவரிடமும் தனுஷ் காதல் கொள்கிறார். இதில் யார் உடனான காதலில் இவர் வெல்வார்? மற்றும் தந்தையின் பாசத்தை தனுஷ் பெறுவாரா? என்பதே படத்தின் மீதி கதையாக இருக்கும் என தெரிகிறது.

dhanush  Thiruchitrambalam movie trailer out now
Author
Chennai, First Published Aug 7, 2022, 7:50 PM IST

தனுஷின் படத்தை திரையில் காண அவரது ரசிகர்கள் ஆண்டுக்கணக்காக காத்திருக்கின்றனர். தற்போது திருச்சிற்றம்பலம் அவர்களது காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகியுள்ள இந்த படத்தை மித்ரன் ஜஹவர் இயக்கியுள்ளார். தங்க மகனுக்கு பிறகு அனிருத் தனுஷ் படத்தில் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான ஜகமே தந்திரம், மாறன் உள்ளிட்ட படங்கள்  மோசமான விமர்சனங்களை சந்தித்ததால்,  திருச்சிற்றம்பலம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ராசிக்கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் உள்ளனர் பிரகாஷ்ராஜ் தந்தையாகவும், பாரதிராஜா தாத்தாவும் நடிக்கின்றார். கமர்சியல் படமாக உருவாகியுள்ள திருச்சிற்றம்பலத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக படத்தின் நான்கு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தன. ஆனாலும் இதில் தனுஷ் எழுதி பாடியிருந்த தாய்க்கிழவி பாடல் சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தது.

மேலும் செய்திகளுக்கு..மேலும் செய்திகளுக்கு..ஒரு விளம்பர பதிவுக்கு இவ்வளவு கட்டணமா ! அலியா பட்டின் சமூக வலைதள வருமானம் எவ்வளவு தெரியுமா?

dhanush  Thiruchitrambalam movie trailer out now

இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும்  என அடுத்தடுத்த ப்ரோமோக்கள் மூலம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. சன் பிக்சர்ஸ் சார்பில் உங்கள் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது விரைவில் டெலிவரி செய்யப்படும் என முதல் ட்வீட் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பிரியா பவானி சங்கர் வீடியோவுடன் இன்னொரு ப்ரோமோவை வெளியிட்டார். அதில் திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் குழப்பம் தெளிந்த தனுஷ் ரசிகர்கள்கொண்டாட்டத்தை துவங்கினர்.

மேலும் செய்திகளுக்கு..தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் இல்லை" சர்ச்சையை கிளப்பிய வசந்தபாலன்...!

பின்னர் ராசி கண்ணா தனது ட்விட்டரில் இன்னும் ஒரு நாள் ஆகும் எனும் காணொளியை பதிவிட்டு இருந்தார். இவ்வாறு அடுத்தடுத்து ப்ரோமோக்களுடன் உற்சாகமாக காத்திருப்பை அதிகரித்து வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

 

அதன்படி உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருக்கிறார் தனுஷ். இவரது தந்தை பிரகாஷ் ராஜ் காவல் அதிகாரியாக உள்ளார். இவர் நாயகனை எப்பொழுதும் கடுமையாக விமர்சிக்கிறார். தந்தையின்கோபத்தால் அவ்வப்போது மனம் நொந்து போகும் நாயகனுக்கு அவரது தோழி நித்யா மேனன், தாத்தா பாரதிராஜா இருவரும் ஆறுதலாக உள்ளனர். இதற்கு இடையேராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் என இருவரிடமும் தனுஷ் காதல் கொள்கிறார். இதில் யார் உடனான காதலில் இவர் வெல்வார்? மற்றும் தந்தையின் பாசத்தை தனுஷ் பெறுவாரா? என்பதே படத்தின் மீதி கதையாக இருக்கும் என தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு...ஹாலிவுட் பிரபலத்தை களமிறக்கிய பொன்னியின் செல்வன்...வெளியான புதிய அப்டேட

 

Follow Us:
Download App:
  • android
  • ios