09:09 PM (IST) Apr 14

கர்நாடகா தேர்தல்: கடலோர கர்நாடகத்தில் அதிக இடங்களை பெறும் கட்சி எது?

கடலோர கர்நாடகத்தில் பாஜக 16 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 19 இடங்களில் 16 இடங்கள் பாஜகவுக்கும் 3 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஜேடி(எஸ்) கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கருத்துக்கணிப்பு கூறுகிறது. 

09:08 PM (IST) Apr 14

கர்நாடகா தேர்தல்: மும்பை கர்நாடகத்தில் அதிக இடங்களை பெறும் கட்சி எது?

மும்பை கர்நாடகத்தில் மொத்தமுள்ள 50 இடங்களில் பாஜகவுக்கு 31 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 19 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜேடி(எஸ்) கட்சிக்கு இங்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கருத்துக்கணிப்பு கூறுகிறது. 

09:08 PM (IST) Apr 14

கர்நாடகா தேர்தல்: மத்திய கர்நாடகாவில் அதிக இடங்களை பெறும் கட்சி எது?

மத்திய கர்நாடகாவில் மொத்தமுள்ள 26 இடங்களில் பாஜக 13 இடங்களையும் காங்கிரஸ் 12 இடங்களையும் ஜேடி(எஸ்) 1 இடத்தையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்திய கர்நாடகாவில் பாஜகவுக்கு 13 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. 

09:08 PM (IST) Apr 14

கர்நாடகா தேர்தல்: பெங்களூரில் அதிக இடங்களை பெறும் கட்சி எது?

பெங்களூரில் மொத்தமுள்ள 32 இடங்களில் பாஜக 15 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்களும் ஜேடி(எஸ்) கட்சிக்கு 3 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

09:07 PM (IST) Apr 14

கர்நாடகா தேர்தல்: ஹைதராபாத் கர்நாடகாவில் அதிக இடங்களை பெறும் கட்சி எது?

ஹைதராபாத் கர்நாடகாவில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 16 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் 23 இடங்களையும் ஜேடி(எஸ்) 1 இடத்தையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. 

06:50 PM (IST) Apr 14

கர்நாடகா தேர்தல்; பழைய மைசூரில் அதிக இடங்களை பெறும் கட்சி எது?

பழைய மைசூரு பகுதிகளில் உள்ள மொத்தம் 57 இடங்களில் காங்கிரஸ் 23 இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 12 இடங்களும், காங்கிரஸுக்கு 23 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஜேடி(எஸ்) கட்சிக்கு 22 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

03:07 PM (IST) Apr 14

பஞ்சாப் பதிண்டா இராணுவ முகாமில் நடந்தது பயங்கரவாத தாக்குதலா? சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலையின் இரங்கல் டுவிட்

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் தான் பதிண்டா இராணுவ முகாமில் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அண்ணாமலை பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

02:38 PM (IST) Apr 14

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ விமர்சனம்

எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, மணிகண்டா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் சொப்பன சுந்தரி படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ.

01:32 PM (IST) Apr 14

Rudhran Review : பைட்டு வேணுமா பைட் இருக்கு... டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு! ஆனா படம்? - ருத்ரன் விமர்சனம் இதோ

பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் ருத்ரன் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்

12:00 PM (IST) Apr 14

திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து? விவரம் இதோ.!

திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் ஊழல் தொடர்பான வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க

11:45 AM (IST) Apr 14

சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் படிக்க

11:02 AM (IST) Apr 14

Shaakuntalam review : சூப்பரா... சுமாரா! சமந்தாவின் ‘சாகுந்தலம்’ எப்படி இருக்கிறது? - முழு விமர்சனம் இதோ

குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் சாகுந்தலம் என்கிற சரித்திர கதையம்சம் கொண்ட படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

10:34 AM (IST) Apr 14

திமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை

திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் ஊழல் தொடர்பான வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

10:32 AM (IST) Apr 14

ரஃபேர் வாட்ச் மர்மத்தை உடைத்த அண்ணாமலை

ரஃபேர் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரபேல் வாட்சை நான் வாங்கினேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

10:03 AM (IST) Apr 14

பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் கலாச்சாரம், சர்வதேச அளவில் புகழ்பெற்றிருப்பதால் உலகம் முழுவதும் இந்த நன்னாள் கொண்டாடப்படுகிறது. வரும் ஆண்டில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருகட்டும் என பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

09:59 AM (IST) Apr 14

நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்... இன்று பிஹூ! கலாச்சார நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மோடி

பிரதமர் மோடி நேற்று டெல்லியில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிலையில், இன்று அசாமில் நடைபெறும் பிஹு விழாவில் பங்கேற்க உள்ளார். மேலும் படிக்க

09:15 AM (IST) Apr 14

சினிமாவை மிஞ்சும் வகையில் இளம்பெண் கொலை.. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?

சினிமா பாணியில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து புதைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மேலும் படிக்க

08:35 AM (IST) Apr 14

ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழ்நாடு வீரர் யோகேஷ்குமார் உடல் மதுரை வந்தது

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழ்நாடு வீரர் யோகேஷ்குமார் உடல் மதுரை வந்தடைந்தது!

07:59 AM (IST) Apr 14

முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்

அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். 

07:58 AM (IST) Apr 14

ப்ளீஸ் நான் இப்ப கர்ப்பமா இருக்கேன்.. விட்டுடு.. கதறியும் விடாமல் கதற கதற பலாத்காரம் செய்த கொடூரன்..!

ஜூசில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்க