Asianet News TamilAsianet News Tamil

சினிமாவை மிஞ்சும் வகையில் இளம்பெண் கொலை.. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வினோத்(38). இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சசிகலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

young Women murder case.. Coimbatore Mahila Court verdict
Author
First Published Apr 14, 2023, 9:11 AM IST | Last Updated Apr 14, 2023, 9:14 AM IST

சினிமா பாணியில்  இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து புதைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வினோத்(38). இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சசிகலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், சசிகலாவுக்கு அவரது முறைமாமனை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடுகளை செய்து வந்ததால் காதலன் வினோத்திடம் பேசுவதை சசிகலா தவிர்த்து வந்துள்ளார். இதனால், எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணிய வினோத் சசிகலாவை கொலை செய்ய திட்டமிட்டார். 

இதையும் படிங்க;- மாணவிகள் குனியும் போது வளைச்சு வளைச்சு போட்டோ.. வீடியோ.. ஆபாச வாத்தியாரை ரவுண்ட் கட்டிய கிராம மக்கள்..

young Women murder case.. Coimbatore Mahila Court verdict

அதன்படி கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி  வினோத், சசிகலாவிடம் தனியாக பேச வேண்டும் என மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலைக்கு அழைத்துள்ளார். இதை நம்பி சசிகலாவும் சென்றுள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சசிகலாவிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வினோத் கொடூரமாக அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்து சாலை ஓரத்தில் இருந்த முட்புதரில் சடலத்தை புதைத்தார். 

இதையும் படிங்க;-  அண்ணியுடன் உல்லாசமாக இருந்த கணவர்.. நேரில் பார்த்த மனைவி.. 2 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை..!

young Women murder case.. Coimbatore Mahila Court verdict

பின்னர், மகள் சசிகலா மாயமானதாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, செல்போன் சிக்னலை வைத்து, வினோத்தை கைது செய்து விசாரித்தில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் சசிகலாவின் எலும்புகள் மட்டுமே கிடைத்த நிலையில், டி.என்.ஏ பரிசோதனையில் அவர் தான் என உறுதியானது. வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி வினோத்திற்கு கொலைக்கு ஆயுள் தண்டனை, கொலை செய்யும் நோக்கத்துடன் கடத்திச் சென்ற குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஆர்.நந்தினி தேவி  பரபரப்பு தீர்ப்பு வழக்கினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios