எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, மணிகண்டா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் சொப்பன சுந்தரி படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ.
தமிழ் சினிமாவில் அதிகளவிலான படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வரிசையில் இவர் நடித்துள்ள திரைப்படம் தான் சொப்பன சுந்தரி. இப்படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் லட்சுமி பிரியா, தீபா, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இந்நிலையில், சொப்பன சுந்தரி திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் உலகமெங்கும் 600-க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டு உள்ளது. டார்க் காமெடி ஜானரில் வெளியாகி உள்ள இப்படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்த விமர்சனங்களை தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது விரிவாக பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்.... Rudhran Review : பைட்டு வேணுமா பைட் இருக்கு... டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு! ஆனா படம்? - ருத்ரன் விமர்சனம் இதோ

படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “சொப்பன சுந்தரி அருமையான படம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எப்படி இதுபோன்று தொடர்ச்சியாக சிறந்த கதையம்சம் கொண்ட படங்களாக நீங்கள் தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள்? என வியப்புடன் கேள்வி எழுப்பி, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், “ ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்கிரிப்ட் தேர்வை பாராட்ட வேண்டும். கார யார் வச்சிருக்கா அல்லது கார் யாருடையது என்கிற சிம்பிளான ஒன்லைன் ஸ்டோரி நன்றாக கனெக்ட் ஆகி உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமிபிரியா மற்றும் கருணாகரன் ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர்” என பாராட்டி உள்ளார்.
மற்றொரு பதிவில், “சில நகைச்சுவையான கதாபாத்திரங்களை வைத்து வேடிக்கையானவற்றை செய்யும் டைம்பாஸ் காமெடி படமாக சொப்பன சுந்தரி உள்ளது. முதல் பாதி பிடித்திருந்தது. இரண்டாம் பாதி வழக்கமான கதைக்குள் கொண்டுவர முயற்சித்தது. வாக்குவாதம் செய்யும் காட்சி மற்றும் கிட்னி காமெடி காட்சி ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய ஹைலைட். மொத்தத்தில் மகிழ்ச்சியான திரைப்படம்” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டில், “சொப்பன சுந்தரி வேடிக்கையான டார்க் காமெடி திரைப்படம். நிறைய நகைச்சுவை காட்சிகள் உள்ளன. ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா மற்றும் தீபா படத்தை முன்னெடுத்து சென்றுள்ளனர். இதுதவிர நிறைய சப்போர்டிங் கேரக்டர்களும் உள்ளன. காமெடி, திரில்லர் மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகியவற்றை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ். மொத்தத்தில் டைம் பாஸ் படமாக சொப்பன சுந்தரி உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்.... Shaakuntalam review : சூப்பரா... சுமாரா! சமந்தாவின் ‘சாகுந்தலம்’ எப்படி இருக்கிறது? - முழு விமர்சனம் இதோ
