Rudhran Review : பைட்டு வேணுமா பைட் இருக்கு... டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு! ஆனா படம்? - ருத்ரன் விமர்சனம் இதோ
பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் ருத்ரன் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருபவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா 3 படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் ருத்ரன். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தான் இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். இப்படம் இன்று உலகமெங்கும் 1500 திரைகளில் திரையிடப்பட்டு உள்ளன. இந்நிலையில், ருத்ரன் படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... Shaakuntalam review : சூப்பரா... சுமாரா! சமந்தாவின் ‘சாகுந்தலம்’ எப்படி இருக்கிறது? - முழு விமர்சனம் இதோ
படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் சிறப்பாக நடித்துள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டைய கிளப்புகின்றன. குறிப்பாக கிளைமாக்ஸ் டுவிஸ்ட் வேறலெவல் என பாரட்டி உள்ளார்.
மற்றொரு பதிவில், “ருத்ரன் படத்தின் கடைசி 20 நிமிடம் மசாலா படத்தை விரும்புபவர்களுக்கு விருந்தாக அமையும். நடனம், பைட், காமெடி, எமோஷன் என அனைத்து ஏரியாவிலும் ராகவா லாரன்ஸ் ஸ்கோர் செய்திருக்கிறார். கதையை பொறுத்தவரை பழைய எம்ஜிஆர் பட டெம்பிளேட் தான். பறந்து பறந்து அடிப்பதையும், ரிவெஞ் எடுப்பதையும், குத்து பாடல்களையும் விரும்பி பார்ப்பவராக இருந்தால் இப்படம் கண்டிப்பாக புடிக்கும்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டில், “டெம்பிளேட் ஸ்டோரி. கதாபாத்திரங்கள் தேர்வு சூப்பர். சாம் சிஎஸ் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. தேவையில்லாத பாடல்களால் முதல் பாதி டல் அடிக்கிறது. இரண்டாம் பாதி ஓகே. பகைமுடி பாடலுடன் கிளைமாக்ஸ் காட்சி தெரிக்கிறது. திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். எமோஷன் காட்சிகள் எடுபடவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
ருத்ரன் படம் குறித்து நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “முதல் பாதி இழுவையாக உள்ளது. இரண்டாம் பாதி ஆவரேஜ் தான். ஆனால் பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையிலான படம் அதுமட்டுமின்றி பண்டிகை நாட்களில் ரிலீஸ் ஆகி உள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்க்கும். இப்படத்தின் ஹைலைட் பாடல்கள் மற்றும் டான்ஸ் தான்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டில், “ருத்ரன் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பழைய படம். இண்டர்வெல் சீன் மற்றும் கிளைமேக்ஸ் சண்டை காட்சி ரசிக்கும் படியாக உள்ளது. மற்றபடி என்ஜாய் பண்ண படத்தில் ஒன்றும் இல்லை. ருத்ரன் 2-ம் பாகம் வேற வருதாம்” என கவலையுடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... தொடர் தோல்வியில் இருந்துமீள ‘தில்லுக்கு துட்டு’ படத்தை மீண்டும் கையிலெடுத்த சந்தானம்- DD ரிட்டர்ன்ஸ் டீசர் இதோ