திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து? விவரம் இதோ.!
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடந்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை கூறிவந்தார்.
திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் ஊழல் தொடர்பான வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடந்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை கூறிவந்தார். மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கொடுத்தார்.
இதனையடுத்து, ஏப்ரல் 14-ம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் இந்த ஆட்சி மட்டுமல்லாமல், கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியிலும் நடைபெற்ற ஊழல்களையும் வெளியிட இருப்பதாக கூறினார். திமுகவினரின் ஊழல் பட்டியல்களை குறிப்பிட்ட நேரத்தில் அண்ணாமலை வெளியிடுவாரா அல்லது பின் வாங்குவாரா என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில், அண்ணாமலை தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, மு.க.அழகிரி உள்ளிட்டவர்களின் படங்களை பதிவிட்டு நாளை காலை 10.15 மணிக்கு திமுக பைல்ஸ் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுகவில் யாரிடம் எவ்வளவு சொத்து உள்ளது என்ற விவரத்தை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அதன்படி கனிமொழி- ரூ.830,33 கோடி, ஜெகத்ரட்சகன் - ரூ.50,219,37 கோடி, எ.வ.வேலு - ரூ.5,442.39 கோடி, கலாநிதி வீராசாமி - ரூ.2,923.29 கோடி பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி - ரூ.581.20 கோடி, உதயநிதி ஸ்டாலின் ரூ.2,039 கோடி, சபரீசன் - ரூ.902.46, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி, ஜி ஸ்கொயர் வருமானம் - ரூ.38,827.70 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.200 கோடிக்கு ஆல்ஸ்டாம் கம்பெனி மூலமாக லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தோ யூரோப்பியன் வென்சர் பிரைவேட் லிமிடெட் என்ற சிங்கப்பூரை சேர்ந்த ஷெல் கம்பெனியும், ஹாங்காங்கை சேர்ந்த குளோபல் கிங் டெக்னாலஜி என்ற ஷெல் கம்பெனியும் தான் 2011ம் ஆண்டு தேர்தல் நிதியாக இந்தத பணத்தை ஸ்டாலினிடம் லஞ்சமாக கொடுத்துள்ளது. இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அண்ணாமலை தெரிவித்தார்.