பிரதமர் மோடி நேற்று டெல்லியில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிலையில், இன்று அசாமில் நடைபெறும் பிஹு விழாவில் பங்கேற்க உள்ளார்.

இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார நிகழ்வுகளையும், பண்டிகைகளையும் பிரதமர் மோடி தொடர்ந்து கொண்டாடி வருகிறார். இன்று, அசாமில் நடக்கும் மெகா பிஹு கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளார். இதுதவிர கவுகாத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 3 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து அதை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். அவர் அசாமில் இன்று திறந்து வைக்க உள்ள திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.14,300 கோடி ஆகும். இன்று மாலை 5 மணியளவில் கவுகாத்தியில் உள்ள சருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள வண்ணமையமான பிஹு கொண்டாட்டத்தில் மோடி கலந்துகொள்ள உள்ளார். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிஹு நடனக்கலைஞர்கள் கலந்துகொண்டு மோடி முன் நடனமாட உள்ளனர்.

கலாச்சார நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மோடி

நேற்று டெல்லியில் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு விழாவில் பங்கேற்றிருந்தார் பிரதமர். கடந்த வாரம், ஈஸ்டர் பண்டிகையையொட்டி டெல்லியின் சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்திற்கு பிரதமர் சென்றார். கடந்த மாதம், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நடத்திய உகாதி கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்.

Scroll to load tweet…

அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம், டெல்லியில் உள்ள தல்கடோரா ஸ்டேடியத்தில் ‘பாரிசு கன்னட டிம் திமாவா’ என்கிற கலாச்சார விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, குருநானக் ஜெயந்திக்காக கடந்தாண்டு நவம்பர் மாதம் டெல்லியில் உள்ள சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையமான இக்பால் சிங் லால்புராவின் இல்லத்தில் ஸ்ரீ குருநானக் தேவ் ஜியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார். அதே மாதத்தில், மணிப்பூர் சங்காய் விழாவில் பிரதமர் வீடியோ மூலம் உரையாற்றினார்.

இதையும் படியுங்கள்... பாஜகவில் இணைகிறாரா நடிகை ராதிகா? டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!!

கடந்தாண்டு அக்டோபரில், இமாச்சலப் பிரதேசம் மாநிலம் குல்லுவில் அமைந்துள்ள தால்பூர் மைதானத்தில் தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார். அதேபோல் செப்டம்பரில், அவர் அகமதாபாத்தில் நடந்த நவராத்திரி விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்.

மே மாதம் புத்த பூர்ணிமாவின் போது உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் உள்ள மஹாபிரிநிர்வாண ஸ்தூபியில் பிரதமர் பிரார்த்தனை செய்தார். அதேபோல் புத்தரின் பிறந்த இடமான நேபாளத்தில் உள்ள லும்பினிக்கும் சென்று வந்தார். 

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த பிஹு கொண்டாட்டங்களில் பிரதமர் கலந்து கொண்டார். 2022 பிப்ரவரியில் ரவிதாஸ் ஜெயந்தி அன்று டெல்லியில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஸ்ரம் தாம் கோயிலுக்கு பிரதமர் சென்றார்.

முன்னதாக, வாரணாசியில் நடந்த தேவ் தீபாவளி மஹோத்சவில் பிரதமர் பங்கேற்றார். மகர சங்கராந்தியன்று மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் இல்லத்தில் நடைபெற்ற "சுடா தாஹி போஜ்" நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார். இப்படி இந்தியாவில் உள்ள பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரங்களையும், திருவிழாக்களையும் பிரதமர் தவறாமல் கொண்டாடி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் மிக அற்புதமானது… பிரதமர் மோடி புகழாரம்!!