டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் நடிகை ராதிகா சரத்குமாரும் பங்கேற்றிருந்த நிலையில் அங்கு வந்த பிரதமர் மோடியை ராதிகா சந்தித்து பேசினார். 

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் நடிகை ராதிகா சரத்குமாரும் பங்கேற்றிருந்த நிலையில் அங்கு வந்த பிரதமர் மோடியை ராதிகா சந்தித்து பேசினார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பட்டு வேஷ்டி, பட்டுச்சட்டை மற்றும் துண்டு ஆகிய பாரம்பரிய உடையுடன் பிரதமர் மோடி கலந்துக்கொண்டார்.

இதையும் படிங்க: தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் மிக அற்புதமானது… பிரதமர் மோடி புகழாரம்!!

பின்னர் விழாவில் பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டிலிருந்து புதிய ஆற்றலைப் பெறும் பழங்கால தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உண்மையிலேயே அற்புதமானது. இது தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் மிகவும் சிறப்படையச் செய்கிறது. தமிழ் கலாச்சாரம் எவ்வளவு பழமையானது. அதனால்தான், தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மக்கள் இரண்டும் நிரந்தரமானது மற்றும் உலகளாவியது. 

இதையும் படிங்க: இந்தியாவுக்கு திரும்பி வாங்க... அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஜீரோதா சிஇஓ நிகில் காமத் அழைப்பு!!

சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையிலிருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்தில் இருந்து சிங்கப்பூர் வரை, தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை தங்களுடன் சுமந்து சென்ற தமிழர்களைக் காணலாம். பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், அவை உலகம் முழுவதும் பரவி கொண்டாடப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் நடிகை ராதிகா சரத்குமாரும் பங்கேற்றிருந்த நிலையில் அங்கு வந்த பிரதமர் மோடியை ராதிகா சந்தித்து பேசினார்.