உலகின் பழமையான மொழி தமிழ் என்பதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

உலகின் பழமையான மொழி தமிழ் என்பதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டிலிருந்து புதிய ஆற்றலைப் பெறும் பழங்கால தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உண்மையிலேயே அற்புதமானது. இது தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் மிகவும் சிறப்படையச் செய்கிறது.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு திரும்பி வாங்க... அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஜீரோதா சிஇஓ நிகில் காமத் அழைப்பு!!

Scroll to load tweet…

அதனால்தான், நான் எப்போதும் இந்த பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு, அதன்மீது அளவுகடந்த பற்றையும் கொண்டிருக்கிறேன். உலகின் பழமையான மொழி தமிழ். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம். தமிழ் இலக்கியமும் பரவலாக மதிக்கப்படுகிறது. தமிழ்த் திரையுலகம் நமக்குபெரிய அளவில் படைப்புகளைத் தந்திருக்கிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், செங்கோட்டையில் இருந்து நமது பாரம்பரியத்தை பெருமைப்படுத்துவது குறித்து பேசினேன்.

இதையும் படிங்க: ராகுலின் சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு... ஏப்.20 அன்று தீர்ப்பு அளிக்கிறது சூரத் நீதிமன்றம்!!

Scroll to load tweet…

தமிழ் கலாச்சாரம் எவ்வளவு பழமையானது. அதனால்தான், தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மக்கள் இரண்டும் நிரந்தரமானது மற்றும் உலகளாவியது. சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையிலிருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்தில் இருந்து சிங்கப்பூர் வரை, தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை தங்களுடன் சுமந்து சென்ற தமிழர்களைக் காணலாம். பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், அவை உலகம் முழுவதும் பரவி கொண்டாடப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.