Tamil News Live Updates: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்
சுருக்கம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளில் முக்கியமாக இருந்தவர் காளியம்மாள், சீமான் மீது அதிருப்தி காரணமாக கடந்த சில மாதமாக கட்சியில் செயல்பாடுகள் இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக காளியம்மாள் அறிவித்துள்ளார்
12:41 AM (IST) Feb 25
நகைக்கடன் மறு அடகு வைக்க புதிய கட்டுப்பாடு! சாமானிய மக்களுக்கு செக் வைத்த ஆர்பிஐ!
நகைக்கடன் மறுஈடு வைப்பதில் ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் சாமானிய மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அசல் தொகையைச் செலுத்த முடியாதவர்கள் நகையை மீட்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் கந்துவட்டிக்காரர்களுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்திய அணியும் அரையிறுதியில் நுழைந்துள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறுகின்றன.
நாதகவில் இருந்து காளியம்மாள் விலகியது ஏன்? - சீமான் சொன்ன விளக்கம்
நம்ம கட்சியில் வேண்டாம் என்று சில பேரை நகர்த்துகிறோம். அதன்பிறகு அவர்கள் எந்த கட்சிக்கு போனாலும் அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. வேண்டும் என்றால் விளக்கம் கேட்கலாம். வேண்டாம் என்றால் விலக்கிதான் வைக்க வேண்டும். ஒரு கட்சியை நடத்தி போகும் போது யார் யார் தேவை.. யார் யார் தேவையில்லை என்பதை கட்சி முடிவு எடுக்கும் என்று சீமான் கூறினார்.
10:35 PM (IST) Feb 24
கேரளாவை உலுக்கும் கொடூர சம்பவம்! 5 கொலை செய்துவிட்டு சரண்டைந்த இளைஞர்!
Kerala Afan mass killing case: திருவனந்தபுரத்தில் 23 வயதான அஃபான் தனது காதலி, சகோதரர், பாட்டி மற்றும் இரண்டு உறவினர்கள் உட்பட ஐந்து பேரைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். பிறகு அவரே திருவனந்தபுரம் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.
புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ள 8 வெஜிடேரியன் உணவுகள் :
சைவ உணவிலும் நிறைவான புரதச்சத்து கொண்ட உணவுகள் அதிகம் உள்ளன. புரதம் அதிகமாக உள்ள பொருட்களை உணவில் சேர்த்தால், மனித உடலுக்கு தேவையான சக்தி, தசை வளர்ச்சி, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அசைவ உணவுகளில் மட்டுமல்ல புரோட்டீன் அதிகம் கொண்ட சைவ உணவு வகைகளும் நிறைய உள்ளன.
சம்பள விஷயத்தில் 3 ஹீரோக்களுக்கு செக் வைத்த டான்! புது ரூட்டில் அதிரடி காட்டும் ஆகாஷ் பாஸ்கரன்!
பெரிய நடிகர்கள் தங்களின் சம்பளத்தை, பல மடங்கு உயர்த்தும் நிலையில், தற்போது டான் பிச்சர்ஸ் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக கால் பதித்துள்ள ஆகாஷ் பாஸ்கரன் புது ரூட்டில் நடிகர்களை அணுகி வருகிறார். அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ரூ.53,185 கோடியை இழந்த டிசிஎஸ்! சந்தை மூலதனத்தில் விழுந்த பெரிய அடி!
டாடா குழும ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பங்குகள் சரிந்ததால் சந்தை மூலதனத்தில் ரூ.53,185 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பள உயர்வு அறிவிப்புக்கு மத்தியில் இந்த சரிவு நிகழ்ந்துள்ளது.
உடல் எடை குறைக்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தாலும், இதற்காக தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும், அதற்காக எவ்வளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்வத சரியாக இருக்கும் என போதிய விழிப்புணர்வு பலருக்கும் இருப்பது கிடையாது.
முதல் முறையாக யோகா செய்ய துவங்க போறீங்களா?..இதை டிரை பண்ணுங்க
யோகா ஒரு மந்திரம் போல, நம்மை உடல் மற்றும் மனதுடன் இணைக்க உதவுகிறது. புதியவர்கள் யோகா பயிற்சியை ஆரம்பிக்க, சில எளிய ஆசனங்களை முதலில் செய்ய துவங்கலாம். தினமும் ஒழுங்காக செய்யும் போது, உடல் மற்றும் மனநிலையில் அமோக மாற்றம் ஏற்படும். இந்த எளிய ஆசானங்களை நீங்களும் செய்து பாருங்கள்.
இந்த 6 பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் அலட்சியம் வேண்டாம்...நினைவாற்றலை குறைத்து விடும்
நாம் தினசரி கடைபிடிக்கும் சில தவறான பழக்கங்கள் நினைவாற்றலை மந்தமாக மாற்றலாம். சிறிய விஷயங்களாக நாம் நினைக்கும் சில விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையில், உடல் மற்றும் மனநலனில் அதிக பாதிப்புக்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தி விடலாம். நினைவாற்றலை பாதிக்கும் இந்த 6 பழக்கங்கள் உங்களிடமும் உள்ளதா என்பதை கவனியுங்கள்.
கர்நாடகா பஸ் டிக்கெட்டில் வெடித்த மொழிப் போர்! பெலகாவி எல்லையில் பதற்றம்!
கர்நாடகாவில் பஸ் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் மொழிப் பிரச்சினையாக வெடித்துள்ளது. பெலகாவி எல்லையில் கன்னடம், மராத்தி மொழிப் பிரச்சினை கைகலப்பாக மாறியதால் பதற்றம் நிலவுகிறது. பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கிளியர் ஸ்கினுக்கு சிறந்த ஹோம் மேட் நைட் கிரீம்...வீட்டிலேயே தயாரிக்கலாம்
இரவு நேரத்தில் சரியான ஹோம் மேட் நைட் கிரீம்களை பயன்படுத்தினால், தோல் இயற்கையாக பிரகாசமாகவும், இளமையாகவும் மாறும். ரசாயன பொருட்கள் இல்லாமல், வீட்டிலேயே இந்த சூப்பர்ஃபுட் நைட் கிரீம்களை தயாரித்து, உங்கள் தோலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். இதை வீட்டிலேயே எப்படி செய்யலாம்? இதோ உங்களுக்கான டிப்ஸ்...
கோடைகாலத்தில் எந்த நேரத்தில் இளநீர் குடித்தால் நல்லது ?
கோடைகாலத்தில், சரியான நேரத்தில் இளநீர் குடிப்பதன் மூலம் உடல் முழுவதும் குளிர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக, நாம் தினசரி எப்போதெல்லாம் இளநீர் குடிக்கலாம் என்பதைக் கவனித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியம்.
கடுப்பேத்தும் சூழலிலும் கம்முன்னு இருந்து, மன அமைதியை பாதுகாக்க சூப்பரான வழிகள்
பலவிதமான காரணங்களால் டென்ஷன் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் அதிகப்படியான டென்ஷன், நெருக்கடியான சூழல் ஏற்படும் போது அதை வெளிக்காட்டுவதாலும், மனதிற்குள் அடக்கி வைத்திருப்பதால் பலவிதமான பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களிலும் கூட நம்மை எப்படி அமைதியாக வைத்துக் கொள்ளலாம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
ஹர்திக் பாண்டியா கையில் கட்டியிருக்கும் வாட்ச்சில் இத்தனை அம்சம் இருக்கா?
பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த வாட்ச், அதனுடைய விலை என்று அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியா vs பாகிஸ்தான்: ரிஸ்வான் பிரார்த்தனை! கிண்டல் செய்த ரெய்னா
துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் பிரார்த்தனை செய்ததை சுரேஷ் ரெய்னா கிண்டல் செய்தார். பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் வெளிநாட்டினரை கடத்த பயங்கரவாதிகள் சதி! பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை!
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பார்க்கும் வெளிநாட்டினரை கடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.