யோகா ஒரு மந்திரம் போல, நம்மை உடல் மற்றும் மனதுடன் இணைக்க உதவுகிறது. புதியவர்கள் யோகா பயிற்சியை ஆரம்பிக்க, சில எளிய ஆசனங்களை முதலில் செய்ய துவங்கலாம். தினமும் ஒழுங்காக செய்யும் போது, உடல் மற்றும் மனநிலையில் அமோக மாற்றம் ஏற்படும். இந்த எளிய ஆசானங்களை நீங்களும் செய்து பாருங்கள்.
யோகா என்பது உடலுக்கும், மனதிற்கும் சமநிலையை வழங்கும் அற்புதமான பயிற்சி. புதிதாக யோகா பயிற்சியை தொடங்கும்போது, சில நேரங்களில் அது சிக்கலாக இருக்கும். ஆனால், சில எளிய மற்றும் பயனுள்ள ஆசனங்களை தினசரி கடைப்பிடிப்பதன் மூலம், யோகாவில் முன்னேறலாம். முதல் முறையாக யோகா பயிற்சியை தொடங்குபவர்கள் செய்வதற்கு ஏற்ற சிறந்த 10 ஆசனங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1. தாடாஸனம் (Tadasana - Mountain Pose)
செய்முறை:
* நேராக நிமிர்ந்து நிற்கவும், கால்களை சேர்த்து கொள்ளவும்.
* கைகளை மேலே உயர்த்தி, விரல்களை நீட்டவும்.
* ஆழ்ந்த மூச்சு எடுத்து, நிம்மதியாக விடவும்.
நன்மைகள்:
* உடலின் நிலைபாட்டை சரி செய்கிறது.
* முதுகெலும்புக்கு நல்ல உடற்பயிற்சி.
* முழு உடல் ஸ்திரமாகி, புத்துணர்ச்சி தரும்.
2. வஜ்ராசனம் (Vajrasana - Thunderbolt Pose)
செய்முறை:
* முழங்கால்களில் அமர்ந்து, முதுகை நிமிர்த்தவும்.
* கை விரல்களை தொடையின் மேல் வைத்து அமரவும்.
* மூச்சை சீராக எடுத்து விடவும்.
நன்மைகள்:
* ஜீரணத்திற்கு மிகவும் சிறந்த ஆசனம்.
* இடுப்பு மற்றும் முதுகுக்கு நல்ல பயிற்சி.
* சமாதானமான மனநிலையை ஏற்படுத்தும்.
3. புஜங்காசனம் (Bhujangasana - Cobra Pose):
செய்முறை:
* வயிறு நன்கு அமிழ்ந்தும் படி படுத்து, கைகளை நெஞ்சின் அருகே வைத்து மேலே தூக்கவும்.
* தலையை தூக்கி, முழுமையாக முதுகை அசைக்கவும்.
* ஆழ்ந்த மூச்சு எடுத்து, மெதுவாக விடவும்.
நன்மைகள்:
* முதுகெலும்பை வலுப்படுத்தும்.
* சுவாசத்திற்கும், நரம்புகளுக்கும் நன்மை அளிக்கும்.
* மனச்சோர்வை குறைக்கும்.
4. அடோ முக ஸ்வனாஸனம் (Adho Mukha Svanasana - Downward Dog Pose)

செய்முறை:
* கைகளை தரையில் வைத்து, கால்களை நிமிர்த்தவும்.
* பின்புறம் உயர்த்தி, முதுகை சீராக வைத்திருக்கவும்.
* தலை கீழே நோக்கி இருக்க வேண்டும்.
நன்மைகள்:
* முழு உடலுக்கும் வலிமை தரும்.
* கைகளை, கால்களை, முதுகை வலுப்படுத்தும்.
* மனச்சோர்வு, தலைவலி குறையும்.
5. பாலாசனம் (Balasana - Child’s Pose)
செய்முறை:
* முழங்கால்களை மடக்கி, பின்புறம் அமரவும்.
* கைகளை முன்புறம் நீட்டி, தலை தரையில் தொட வேண்டும்.
* மூச்சை சீராக எடுத்து விடவும்.
நன்மைகள்:
* உடலுக்கு மிகுந்த இளைப்பாறுதல் தரும்.
* முதுகெலும்பை நீட்டித்து, வலியைக் குறைக்கும்.
* மனஅழுத்தம் குறையும்.
6. தூந்தாஸனம் (Dandasana - Staff Pose)
செய்முறை:
* அமர்ந்து, கால்களை நேராக நீட்டவும்.
* முதுகு நிமிர்த்தி, கைகளை தொடையில் வைக்கவும்.
* மூச்சை சீராக எடுத்து விடவும்.
நன்மைகள்:
* முதுகு மற்றும் இடுப்பு பகுதி வலுப்படும்.
* உடலின் நிலைபாடு சரியாகும்.
* நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
7. திரிகோணாசனம் (Trikonasana - Triangle Pose)
செய்முறை:
* கால்களை விட்டு, பக்கவாட்டில் நின்று, ஒரு கையை தரையில் வைத்து, மற்ற கையை மேலே உயர்த்தவும்.
* முகம் மேல்நோக்கி இருக்க வேண்டும்.
நன்மைகள்:
* உடலின் இளமை மற்றும் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும்.
* வயிற்றுப் பகுதியில் கொழுப்பு குறையும்.
* உடலின் சமநிலை மேம்படும்.
8. சுகாசனம் (Sukhasana - Easy Pose)

செய்முறை:
* சாதாரணமாக சம்மணக்கால் போட்டு உட்கார்ந்து, கால்களை நீட்டி நிமிர்ந்து உட்கார வேண்டும்.
* கண்களை மூடி, நிதானமாக மூச்சை எடுத்து விடவும்.
நன்மைகள்:
* மனஅமைதி மற்றும் மன ஒருமைப்பாடு கிடைக்கும்.
* உடலின் ஊட்டச்சத்து உறிஞ்சும் திறன் மேம்படும்.
* மன அழுத்தம், கவலையை குறைக்கும்.
9. உத்தானாசனம் (Uttanasana - Standing Forward Bend)
செய்முறை:
* கால்களை சேர்த்து, மேலிருந்து கீழாக குனிந்து, கைகளை தரையில் வைக்கவும்.
* முடிந்தால் தலை முழுவதுமாக கைகளை தொடும்படி வைக்கவும்.
நன்மைகள்:
* முதுகு வலியை குறைக்கும்.
* சுறுசுறுப்பான உணர்வை தரும்.
* சிறந்த ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும்.
10. சவாஸனம் (Savasana - Corpse Pose)
செய்முறை:
* தரையில் பின்புறமாக படுத்து, கைகளை, கால்களை தளர்த்தி விடவும்.
* முழுமையாக உடலை தளர்த்தி, மூச்சை சீராக எடுத்து விடவும்.
நன்மைகள்:
* முழுமையான மனஅமைதி தரும்.
* உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.
* தூக்கத்திற்கு உகந்த யோகா ஆசனம்.
