- Home
- Sports
- Sports Cricket
- ரூ.7 கோடி மதிப்பிலான வாட்ச் – ஹர்திக் பாண்டியா கையில் கட்டியிருக்கும் வாட்ச்சில் இத்தனை அம்சம் இருக்கா?
ரூ.7 கோடி மதிப்பிலான வாட்ச் – ஹர்திக் பாண்டியா கையில் கட்டியிருக்கும் வாட்ச்சில் இத்தனை அம்சம் இருக்கா?
Hardik Pandya Watch in IND vs PAK Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சிறந்த ஸ்டார் பிளேயர் ஹர்திக் பாண்டியா தனது கையில் கட்டியிருந்த ரூ.7 கோடி மதிப்பிலான வாட்ச் தான் இப்போது சோஷியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ரூ.7 கோடி மதிப்பிலான வாட்ச் – ஹர்திக் பாண்டியா கையில் கட்டியிருக்கும் வாட்ச்சில் இத்தனை அம்சம் இருக்கா?
Hardik Pandya Watch in IND vs PAK Champions Trophy 2025 : கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு சென்றது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து நடையை கட்டியது. வரும் 27ஆம் தேதி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ரூ.7 கோடி மதிப்பிலான வாட்ச் – ஹர்திக் பாண்டியா கையில் கட்டியிருக்கும் வாட்ச்சில் இத்தனை அம்சம் இருக்கா?
இதில் சவுத் சகீல் மட்டும் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். கேப்டன் முகமது ரிஸ்வான் 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சுப்மன் கில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ரூ.7 கோடி மதிப்பிலான வாட்ச் – ஹர்திக் பாண்டியா கையில் கட்டியிருக்கும் வாட்ச்சில் இத்தனை அம்சம் இருக்கா?
இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஷ்ரேயாஸ் 56 ரன்களில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 100 ரன்கள் எடுத்து கடைசி வரை இருந்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இது அவரது 51ஆவது சதம் ஆகும். அதோடு, இந்தப் போட்டியில் அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
ரூ.7 கோடி மதிப்பிலான வாட்ச் – ஹர்திக் பாண்டியா கையில் கட்டியிருக்கும் வாட்ச்சில் இத்தனை அம்சம் இருக்கா?
இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவர், 8 ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக் கொடுத்தார். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கூட விக்கெட் கைப்பற்ற தடுமாறிய போது சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை கைப்பற்றிக் கொடுத்தார். அதுவும் பாபர் அசாம் விக்கெட்டை கைப்பற்றினார். அப்போது ஹர்திக் பாண்டியா தனது கையில் கட்டியிருந்த வாட்ச் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆரஞ்சு நிறம் கொண்ட அந்த வாட்ச் பற்றி தான் இப்போது சோஷியல் மீடியாவில் அதிகளவில் பேச்சு அடிபடுகிறது.
ரூ.7 கோடி மதிப்பிலான வாட்ச் – ஹர்திக் பாண்டியா கையில் கட்டியிருக்கும் வாட்ச்சில் இத்தனை அம்சம் இருக்கா?
அதோடு அந்த வாட்சின் விலையை பற்றி அலசி ஆராய தொடங்கி இப்போது அந்த வாட்சின் விலை ரூ.7 கோடி என்று தெரியவந்துள்ளது. மேலும், ரிச்சர்ட் மிலே நிறுவனத்தின் ஆர்எம் 27 வாட்ச் மாடல். இது டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரஃபேல் நடாலுக்காக பிரத்யேகமாக வடிவமக்கப்பட்டது. குறைவான அளவில் தயாரிக்கப்பட்ட வாட்ச் தான் இந்த மாடல் வாட்ச். இந்த வகை வாட்சானது கிரேடு 5 டைட்டானியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், கீழே விழுந்தாலும் உடையாமலும் கீறலும் விழாமல் இருப்பதற்காகவும், கண்ணாடி கிளார் அடிக்காமலிருக்கவும் ஆன்டி கிளேர் கிரிஸ்டல் பொறிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வாட்ச்சை தான் ஹர்திக் பாண்டியா இப்போது ஒவ்வொரு போட்டிக்கும் பயன்படுத்தி வருகிறார். ஆனால், இவ்வளவு ஆடம்பரமான வாட்ச் தேவையா என்று ஒருபுறம் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.