இரவு நேரத்தில் சரியான ஹோம் மேட் நைட் கிரீம்களை பயன்படுத்தினால், தோல் இயற்கையாக பிரகாசமாகவும், இளமையாகவும் மாறும். ரசாயன பொருட்கள் இல்லாமல், வீட்டிலேயே இந்த சூப்பர்ஃபுட் நைட் கிரீம்களை தயாரித்து, உங்கள் தோலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். இதை வீட்டிலேயே எப்படி செய்யலாம்? இதோ உங்களுக்கான டிப்ஸ்...
நம் தோல் தினமும் மாசு, அழுக்கு, மற்றும் வெப்பத்தை எதிர்கொள்கிறது. அதனால் இரவில் சரியான பராமரிப்பினால் அதை புத்துணர்ச்சி பெறச் செய்யலாம். நைட் கிரீம் என்பது இரவில் தோலை பராமரிக்கவும், புதுப்பிக்கவும், மற்றும் இயற்கையான இளமையை தரவும் உதவும். எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சிறந்த நைட் கிரீம்களை பார்க்கலாம்.
1. ஆலிவ் ஆயில் - அலோவேரா நைட் கிரீம் :
தேவையான பொருட்கள்:
2 டீஸ்பூன் - ஆலிவ் ஆயில்
2 டீஸ்பூன் - அலோவேரா ஜெல்
1 டீஸ்பூன் - தேன்
1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து, மிதமான சூட்டில் சூடாக்கவும்.
* பிறகு, அலோவேரா ஜெல் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
* இந்த கலவையை ஒரு கண்ணாடி டப்பாவில் வைத்துப் பயன்படுத்தலாம்.
எப்படி பயன்படுத்துவது?
இரவு தூங்குவதற்கு முன் முகத்தை சுத்தம் செய்து, இதை மெல்ல தடவி, 5 நிமிடம் மசாஜ் செய்யவும்.
நன்மைகள்:
* தோலுக்கு ஆழமான ஈரப்பதம் சேர்க்கும்.
* முகப்பரு மற்றும் கருமை நீங்க உதவும்.
* இயற்கையான முக பிரகாசம் கிடைக்கும்.
2. கேஸ்டர் ஆயில் - வைட்டமின் ஈ நைட் கிரீம்

தேவையான பொருட்கள்:
2 கேப்சூல் வைட்டமின் ஈ எண்ணெய்
1 டீஸ்பூன் கேஸ்டர் ஆயில்
2 டீஸ்பூன் அலோவேரா ஜெல்
செய்முறை:
* அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, க்ரீம் போல் உருவாக்கவும்.
* கண்ணாடி டப்பாவில் சேமித்து பயன்படுத்தலாம்.
எப்படி பயன்படுத்துவது?
முகத்தை கழுவி, மெல்ல இந்த க்ரீமை தோலில் தடவி, தூங்கலாம்.
நன்மைகள்:
* முகத்தில் இருக்கும் நுனி கோடுகளை குறைக்கும்.
* தோல் மென்மையாக, இளமையாக தோன்ற உதவும்.
* சுருக்கங்கள் மற்றும் புள்ளிகள் குறையும்.
3. சர்க்கரை - பன்னீர் நைட் கிரீம்:
தேவையான பொருட்கள்:
5-6 குங்குமப்பூ
1 டீஸ்பூன் பன்னீர்
2 டீஸ்பூன் அலோவேரா ஜெல்
1/2 டீஸ்பூன் தேன்
செய்முறை:
* குங்குமப்பூவை பன்னீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்.
* பிறகு, அதில் அலோவேரா ஜெல் மற்றும் தேன் சேர்த்து கலக்கவும்.
* கண்ணாடி டப்பாவில் வைத்துப் பயன்படுத்தலாம்.
எப்படி பயன்படுத்துவது?
இரவு நேரத்தில் முகத்தில் மெல்ல தடவி, சிறிது நேரம் உலர விடவும்.
நன்மைகள்:
* தோல் பொலிவாக மாறும்.
* முகப்புள்ளிகள் மறையும்.
* இயற்கையான நிறத்தை ஒழுங்காக பராமரிக்கும்.
4. பாலாடைக்கட்டி - தேன் நைட் கிரீம் :
தேவையான பொருட்கள்:
1 டீஸ்பூன் பாலாடைக்கட்டி
1/2 டீஸ்பூன் தேன்
2-3 துளிகள் லெமன் ஜூஸ்
செய்முறை:
* அனைத்தையும் நன்றாக கலந்து, கிரீம் போல உருவாக்கவும்.
* கண்ணாடி டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம்.
எப்படி பயன்படுத்துவது?
இரவு நேரத்தில் முகத்தில் மெல்ல தடவி, நன்றாக ஊடுருவ விடவும்.
நன்மைகள்:
* முகத்திற்கு பளபளப்பை தரும்.
* முகம் மென்மையாக மாறும்.
* உலர்ந்த சருமத்திற்கு சிறந்த ஈரப்பதம் தரும்.
யாருக்கு எது சிறந்தது?
* உலர்ந்த தோல் – ஆலிவ் ஆயில் - அலோவேரா கிரீம்
* வயது முதிர்ந்த தோல் – வைட்டமின் ஈ - கேஸ்டர் ஆயில் கிரீம்
* கருமை நீக்க – சர்க்கரை - பன்னீர் கிரீம்
* பிரகாசமான தோல் – பாலாடைக்கட்டி - தேன் கிரீம்
ஹோம் மேட் நைட் கிரீம் பயன்படுத்துவதின் நன்மைகள் :
* 100% இயற்கையானவை – எந்த ரசாயனமும் இல்லை
* இரவில் சருமம் புதுப்பிக்க உதவும்.
* இயற்கையாக முகத்தை பிரகாசமாக மாற்றும்.
* சரும சீரமைப்பு மற்றும் ஆரோக்கியமான தோல் பெறலாம்.
