
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! அன்பில் மகேஷ்!
Tamil News Live Updates: மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! அன்பில் மகேஷ்!

சுருக்கம்
அரசுப் பள்ளியில் படித்து இரு மொழி கொள்கையை பின்பற்றியவர்களே இஸ்ரோ உள்பட அனைத்து உயர் அமைப்புகளில் பொறுப்பில் உள்ளனர். மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. மீண்டும் ஒரு மொழிப்போரை ஒன்றிய அரசு கொண்டு வந்துவிடக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
03:19 PM (IST) Feb 21
திமுக அண்ணா அறிவாலயம் 'ரெட்லைட் ஏரியா'வா? பொன். ராதாகிருஷ்ணன் ஆவேசம் !

03:19 PM (IST) Feb 21
தைரியம் இருந்தால் அறிவாலயத்தை தொட்டு பாருங்க! அண்ணாமலைக்கு சேகர் பாபு சவால்!

02:29 PM (IST) Feb 21
அதிபரே சொல்லிட்டாரு! மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்த காங்கிரஸ்! வானதி சீனிவாசன் பகீர்!
அமெரிக்க அரசு இந்திய தேர்தலுக்காக 182 கோடி ரூபாய் நிதி வழங்கியதாக டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து சதித்திட்டம் தீட்டியிருப்பதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
02:22 PM (IST) Feb 21
புதிய சாதனை படைத்த முகமது ஷமி ! காயத்துக்கு பிறகு மாஸ் கம்பேக் !

02:22 PM (IST) Feb 21
முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல் ? சுசீத்ரா ஷெட்டி செயலால் எழுந்த சந்தேகம் !

01:12 PM (IST) Feb 21
துயரமான செய்தியை கேட்டதும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்! நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!
மூணாறில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்த மாணவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
12:32 PM (IST) Feb 21
மருதமலை கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த யோகிபாபு
கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோவிலுக்கு வந்த யோகிபாபு அங்கு நடைபெற்ற அர்த்தஜாம பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.

12:19 PM (IST) Feb 21
இன்றைய கிரிப்டோகரன்சி சந்தை: பிட்காயின் $98,000 தாண்டியது
சிறப்பாக செயல்படும் கிரிப்டோகரன்சிகளில், IP தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிக லாபம் ஈட்டியுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
10:34 AM (IST) Feb 21
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! மார்ச் 4ம் தேதி விடுமுறை!
அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
10:33 AM (IST) Feb 21
அமெரிக்க புலனாய்வு இயக்குனராக அமெரிக்க வாழ் இந்தியர் காஷ்யப் பட்டேல் நியமனம்? யார் இவர்?
காஷ் படேல் புதிய FBI இயக்குனராக நியமிக்கப்பட்டதை வெள்ளை மாளிகை வரவேற்றுள்ளது. இது டொனால்ட் டிரம்ப் சட்டத்தை நிலைநாட்டும் திட்டத்திற்கு முக்கியமானது என்று கூறியுள்ளது.
10:12 AM (IST) Feb 21
ரிஷபம் ராசிக்கான மார்ச் மாத ராசி பலன்: தீராத கடன் தீரும்; இனி ராஜா மாதிரி வாழ்க்கை அமையும்!
Rishabha Rasi 2025 March Rasi Palan in Tamil : ரிஷப ராசியினருக்கு மார்ச் மாதம் பலன்கள் எப்படி என்று இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
10:11 AM (IST) Feb 21
அதிரடியாக குறைந்த விலை- ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?
தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 8025 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 64ஆயிரத்து 200 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
10:11 AM (IST) Feb 21
நடிகை அசின் காதலில் வீழ்ந்த கதை தெரியுமா?
கேரளால கொச்சில பிறந்தவங்க அசின். அப்பா பிசினஸ்மேன், அம்மா சர்ஜன். அசினுக்கு சீக்கிரமா மொழிய கத்துக்கிற திறமை இருந்துச்சு, ஏழு மொழியில ஈஸியா பேசுவாங்க. முதல் சினிமாவுல நடிக்கும்போது அசினுக்கு வெறும் 15ல இருந்து 16 வயசு. மேலும் படிக்க
10:10 AM (IST) Feb 21
மதுரை எய்ம்ஸ் மருத்துமனை கட்டுமான பணி தொடங்கியாச்சா.? எந்த நிலையில் இருக்கு தெரியுமா.?
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் ஜனவரி 2025 நிலவரப்படி முதற்கட்ட கட்டுமானத்தில் 24% நிறைவடைந்துள்ளது. 2027 பிப்ரவரிக்குள் முழு கட்டுமானமும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
08:55 AM (IST) Feb 21
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் முன்னாள் மனைவி சாயிரா
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாயிரா பானு திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாயிரா பானுவுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சாயிரா பானுவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். சாயிரா பானு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மற்றும் அறுவை சிகிச்சை குறித்து சாயிரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா தகவல் அளித்துள்ளார். மேலும் படிக்க
08:30 AM (IST) Feb 21
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் விமர்சனம்
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் முதல் விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். விமர்சனம் படிக்க
08:02 AM (IST) Feb 21
கைவிட்ட உயர்நீதிமன்றம்! வேறு வழியில்லாமல் தேர்தல் ஆணையம் கதவை தட்டி ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி!
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. இதனால் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
07:06 AM (IST) Feb 21
2642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார் முதல்வர்
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 2642 மருத்துவர்களுக்கு வரும் 26ம் தேதி பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
07:03 AM (IST) Feb 21
இன்றைய பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ.100.90ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.48ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவின் விலை லிட்டருக்கு ரூ.90.50ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.