MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிபரே சொல்லிட்டாரு! மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்த காங்கிரஸ்! வானதி சீனிவாசன் பகீர்!

அதிபரே சொல்லிட்டாரு! மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்த காங்கிரஸ்! வானதி சீனிவாசன் பகீர்!

அமெரிக்க அரசு இந்திய தேர்தலுக்காக 182 கோடி ரூபாய் நிதி வழங்கியதாக டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து சதித்திட்டம் திட்டம்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Feb 21 2025, 02:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிபரே சொல்லிட்டாரு! மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்த காங்கிரஸ்! வானதி சீனிவாசன் பகீர்!

அதிபரே சொல்லிட்டாரு! மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்த காங்கிரஸ்! வானதி சீனிவாசன் பகீர்!

மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற முடியாமல், வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து சதித்திட்டம் தீட்டியிருக்கிறது காங்கிரஸ் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த காலகட்டத்தில் இந்திய தேர்தலுக்காக அமெரிக்க அரசு நிதி 182 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு யாரையோ வெற்றிபெற வைக்க பைடன் அரசு முயற்சி செய்துள்ளது என பேசியிருக்கிறார்.

25
அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் முன்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து ஏதாவது ஒரு பெரிய பிரச்னையை கிளப்புவார்கள். ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனம், இந்தியாவைப் பற்றி இந்திய நிறுவனங்களைப் பற்றி ஆய்வறிக்கை வெளிடுவார்கள். அதை வைத்துக் கொண்டு காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்தை முடக்குவார்கள்.

35
ராகுல் காந்தி

ராகுல் காந்தி

கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தலைவராக இல்லாமல் காங்கிரஸை வழிநடத்தி கொண்டிருக்கும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். லண்டன் உள்ளிட்ட நகரங்களில் அவர் பேசும்போது, இந்தியாவைப் பற்றிய, பிரதமர் நரேந்திர மோடி அரசைப் பற்றி தவறான தகவல்களை பேசினார். இந்தியா விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்றும் பேசினார்.

45
அமெரிக்கா அதிபர் டிரம்ப்

அமெரிக்கா அதிபர் டிரம்ப்

இந்தியாவில் அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க, அமெரிக்க பெரும் பணக்காரர் ஜார்ஜ் சோரஸ் பெருமளவில் நிதியளித்து வந்தார். இந்தச் சூழலில்தான், இந்தியாவில் வேறு யாரையோ ஆட்சியில் அமர்த்த அமெரிக்க அரசு நிதி 182 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபரே கூறியிருக்கிறார். 

55
பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இதன் மூலம், பிரதமர் மோடியை தோற்கடிக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமெரிக்க உதவியை நாடியிருப்பது அம்பலமாகியுள்ளது. மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற முடியாமல், வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து சதித்திட்டம் தீட்டியிருக்கிறது காங்கிரஸ். இதை இந்திய மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தேச விரோத சக்திகள் ஒவ்வொருவராக அம்பலமாகி வருகிறார்கள். மக்கள் மன்றத்தில் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று  வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
இந்திய தேசிய காங்கிரஸ்
டொனால்ட் டிரம்ப்
பிரதமர் மோடி
வானதி சீனிவாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved